.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, January 29, 2007

மொக்கை பதிவு

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. ஆனா சரக்கு எதுவும்
இல்ல. அதனால இந்த மொக்கை :)

************
நம்ம ஊரு, "யாரு ஆகப்போறா க்ரோர்பதி"
சொந்த சரக்கு இல்ல,சுட்ட சரக்கு தான்னு
கேள்விப்பட்டுருக்கேன். ஆனா இப்போ
கொஞ்ச நாளாத்தான் ஒரிஜினல் சரக்கு "Who
wants to be a Millionaire"
ப்ரோக்ராம் பாத்துட்டு
இருக்கேன். செட்டுல இருந்து,லைட்டிங்,ம்யூசிக்,
சேரு,ஆட்டத்தோட ரூல்ஸ்,அப்பறம் கடேசில
ஊதுற அபாய சங்கு வரைக்கும் ஈ அடிச்சான்
காப்பி தான். இருந்தாலும் இந்தியால நான்
விரும்பி பாக்குற ஒரு ப்ரோக்ராம் இது.
நெட்ட அவரோட ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில
ஒரு எடத்த புடிச்சிருந்தாரு. இப்போ குட்ட அத
எட்டிப் பிடிப்பாரா பாப்போம்.

************

போன சனிக்கிழம எங்க வீட்டுக்கு பக்கத்துல
இருக்குற library போனேன். நம்ம மழை பெயும்போது
கூட நனஞ்சிக்கிட்டே ஓடுவோமே தவிர அந்தப்பக்கம்
ஒதுங்கினது கெடயாது. இருந்தாலும் இந்த ஊரு library-ல
Movie DVDs கிடைக்கும், நம்ம ஊரு படங்களோட DVDs
இருக்கும்னு டேமேஜர் (இல்ல இல்ல மேனேஜர்)
சொன்னதால போனேன். Membership card வாங்கிட்டு
"Where is the DVD section"னு கேட்டேன்.
"அப்ப நீ புக் எல்லாம் படிக்க வரலியா?" அப்படிங்கற
மாதிரி ஒரு லுக்கு விட்டுட்டு வழி சொல்லிச்சு அந்த
வெள்ளக்கார பாட்டி. நமக்கு ஒரு ஷாக் இருக்கும்னு
தெரியாம அந்த Section போனேன்.

ஏன் நேரம். என் கண்ணுக்கு தென்பட்ட மொதோ படம்
"சுள்ளான்". அடடா,இதெல்லாம் ஒரு படம், அதுக்கு ஒரு
DVD, அத கொண்டு வந்து அமெரிக்கால library-ல வச்சு
நம்ம மானத்த வாங்குறானுங்களே-னு கடுப்பாகி
அடுத்த shelf போயி பாத்தா அங்க "ட்ரீம்ஸ்" படம்.

அடேய் வெள்ளக்காரனுங்களா,
இந்த படமெல்லாம் எங்க ஊர்லயே 2 ஷோக்கு
மேல ஓடலியேடா,
யாருமே பாக்காத படத்துக்கு யாருக்காகடா
DVD வச்சிருக்கீங்க...
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயாடா?
(read: vivek style)

ஏன் தான் போனோம்னு ஆயிடுச்சு. அப்பறம் நம்ம
தலைவர் படம் முத்து DVD பாத்து தான் மனச
தேத்திக்கிட்டேன். மத்தபடி library சூப்பர். உள்ளயே
internet facility எல்லாம் இருக்கு. வெளிய park மாதிரி கட்டி
வச்சிருக்காங்க. ஒரு book எடுத்துட்டு வெளிய போய்
ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே படிக்கிற மாதிரி ஆக்ட்
குடுக்கலாம் (சம்மர்ல) , அப்பறம் online account, online book
renewal அது இதுன்னு ஏகப்பட்ட facilities. எல்லாமே ஓசில..
சோ,ஒரு "ஓ" போடலாம் :)
*************

ஜி3 ஒரு puzzle post போட்டிருந்தாங்க. அதே ஸ்டைல்ல
இதையும் ட்ரை பண்ணுங்க. பதில நானே கமெண்ட்ல
போட்டுட்றேன் :)


*********
இந்தூர்ல வெயில் புடிங்கிக்கிட்டு அடிக்குதே-னு
சொல்லி இந்த weekend ஆட்டம் போட்டாச்சு :)

வெயிலோடு விளையாடி


வெயிலோடு உறவாடி

எவ்வளவு ட்ரை பண்ணாலும் எதிர்கட்சி அளவுக்கு
மொக்கை போட முடியலியே. :(

சரி, நெக்ஸ்ட் மீட் பண்றேன் உங்கள

Friday, January 19, 2007

GURU

Uh, a post in English after a long time...

Now that the much awaited GURU has hit the screens all over the
world, i got an oppurtunity to watch it this weekend.
GURU alias GURUBHAI alias DHIRUBHAI :) was screened in 3
theatres here in Cleveland and was HOUSEFULL everywhere. I was a
good 30 mts early (vera edukku, site seeing thaan) and grabbed a seat
in the last row only to realize that half an hour into the movie, i wud be in
the second last row... there was a row created behind me with xtra
chairs for the late comers!!!
Must admit it was a good North Indian crowd :)

Anyone who is a distant relative of Indian cinema would pay to watch
ManiRatnam's movies. Me,being his ardent fan,wud never miss it. I saw
only the Hindi version but thankfully with English subtitles :)

OK. My First take: Nice movie. No masala. Worth watching !!

Movie is about someone who dreams and dreams BIG. If you have the knowledge,courage,hardwork and never-say-die attitude , you can mend
your way to success. Thats GURUKANT DESAI. As per Maniratnam, he
can be anyone. Ambani / Mittal or anyone though in the movie there are
compelling reasons to believe GURUBHAI is a clone of DHIRUBHAI
(polyester business,license issues etc etc)

It has become a style in Mani's movies to portray the same scene at
different stages of the movie with different meanings.(Just like how
Alaipayuthey starts with 'Endrendrum punnagai' song and the same
sequence is revisited later in the movie with more meaning)
GURU starts and ends with Abhishek speaking at a stadium. Nice and
unique Maniratnam style !!!

Film starts at a small North Indian village with a resolute boy (Gurukant
Desai) pleading his Dad to send him to Turkey for taking up the job (of
delivering petrol cans) with Shell. (onsite at a young age,uh?)
He gets his Dad's nod and goes to Istanbul,works there for nearly 7 yrs
(grows to Abhishek) and even gets promoted @ the company. But he
rejects the offer in order to chase his own dream.

He comes back to India and wants to start polyester business in
Mumbai. However he falls 15,000Rs short.Marries Aish (his friend and
business partner's sister), gets the dowry of 25000Rs and amidst a lot
of initial hurdles with bureaucrats, gambles in polyester business, becomes
an instant hit and soon becomes a big/good businessman.
(Marrying Aish for the dowry stands as a testimony to the fact that
Gurukant wants to get to the end no matter how)

4 snapshots of his factories (SHAKTI) and he is now the BIGGEST
ENTREPRENEUR in India.The 2nd half is covered with a tinge of sadness
in every frame. Madhavan comes as a journalist who works for Mithun,
both living for the caption "Truth has to be exposed". They succeed in
exposing the public about how Guru breaks laws to get to his position.
An enquiry commission is set up against Guru and Shakti industries and
we reach the climax.

5 minutes. Thats the time given to Guru to justify his acts. Four and a
half minutes of dialogue with 30 seconds profit (thats business he says) is
all Guru takes to explain how he chased his dream inspite of all odds.
To succeed in chasing your dreams, you have to mend your own way.
If that means cajoling few politicians or breaking few laws, there is no
harm in doing it. Highly unrealistically,the enquiry commission members
leave Guru and Shakti industries with just 63 odd lakh rupess fine.

Movie ends with Abhishek addressing a packed audience in a football
stadium (much like Dhirubhai addressing RIL shareholders who were in
such huge numbers that the shareholders meet generally happens in
stadiums) with the words

"Now, Go, Win the world"


Positives:
Maniratnam,A.R.Rahman,Rajiv Menon (needless to say)
Abhishek(hats off, he has lived as Gurukant. pulikku pirandadhu
puliyaathaan irukkum)
Madhavan (his Guru's movie. so he has to act well and he does. has put
down a lot of weight for this movie)
Songs:
Mayya Mayya -- super hot Mallika's item number -- treat for the eyes :)
Barso Re -- Aish's intro song. Picture perfect location with the most
photogenic face.
Tere Bina -- duet @ Madurai Thirumalai Nayakkar Mahal.
Extremely artistic !!!
(my house is a stone's throw away from the mahal and i cud have
watched the song from the terrace of my house with a cup of tea :)
how good it wud have been. Missed it :(
Jaage Hain -- Typical of Mani's movies, comes in bits and pieces but
never fails to create an impact esp when ARR is at his high pitch !!!
Oh yeah, i missed. Aish has acted pretty well in this movie :)

Negatives:
I must mention few here.
-- Not in the Top 5 of Mani's movies.
-- Climax was not really upto the mark.Eventhough the climax dialogues
are sharp,fails to justify GURU's acts and one just wonders how the
committee members leave him with just fine !!
-- Guru's vision/dominance and never-say-die attitude was portrayed
beautifully but the struggles in his business was not enforced as much
as i wud have wanted mani to... say, in bringing up the factory. Just 4
snapshots and he is owning the biggest factory in India !!! maybe mani
cud have shown how he mended his way thru the bureaucrats... how he
broke few laws to get to where he wanted to !!!
-- Vidya Balan looks beautiful but her character itself is not needed in
this film in my opinion.

So guys, this is not just a regular Rags-to-Riches story.
GO FOR IT !!!

Wednesday, January 17, 2007

எண்ணெய் கத்திரிக்காய்

மக்கள் எல்லாரும் பொங்கல நல்ல ensooooooooi
பண்ணியிருப்பீங்க-னு நினைக்கிறேன். பொங்கலுக்கு
தீபாவளி சமைக்க முடியாதுங்கறதுக்காக பொங்கலுக்கு
நான் சமச்ச பொங்கல் தான் இது :)


இப்ப எதுக்குடா இவன் சமச்சதெல்லாம் போட்டோ
பிடிச்சி போட்ருக்கான்னு நீங்க கேக்கலாம்.
கேக்காட்டியும் நான் சொல்லுவேன் :)

போன வாரம் blogsville-ல ஒரு trend. எங்க பாத்தாலும்
கவிதை இல்லேனா சமையல். நமக்கு கவிதை வராது
(sun rises in the east nu ellam sollanuma enna?). சமையல்
மட்டும் சூப்பரா வருமா-னு எல்லாம் கேக்கப்படாது.
நானும் சமைக்கிறேங்கறதுக்கு சாட்சியாத்தான்
அந்த போட்டோ :) ஒரு 8 மாசமா சொந்த சமையல்
சாப்டும் உயிரோட தான் இருக்கேன் :)

சமையல்ல prathmic & madhyama பாஸ் பண்ணியாச்சு.
(எல்லாம் நனப்பு தான்... ஹி ஹி)
இப்ப எல்லாம் evening ஆணி புடிங்கிட்டு வீட்டுக்கு
வந்தா டீ,காபி கிடையாது. only சூப் தான். பாலக் சூப்,
veg corn சூப், weekend ஆனா சிக்கன் சூப்-னு ஒரே ரவுசு
தான்.

சரி, நம்மதான் இப்போ பிஸ்தாயிட்டோம்னு ஒரு
confidenceல (இல்லல்ல over confidenceல) எண்ணெய்
கத்திரிக்காய் செய்யலாம்னு ப்ளான் பண்ணி சும்மா
மாங்கா சீவுற மாதிரி நீள நீளமா கட் பண்ணி
புளித்தண்ணில போட்டு (கசப்பு போயிடுமாம்) sideல
கடாய் ஹீட் பண்ணி எண்ணெய் ஊத்தி, அது சூடானதும்
கடுகு போட்டு வெட்டி வச்ச கத்திரிக்காய போட்டு
அப்பறம் regulars, மஞ்சத்தூள்,உப்பு,காரம் எல்லாம்
போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டு,
"அப்பறம் என்னடா?"-னு கேட்டேன்.
"அவ்ளோதான் மச்சி, மூடி வச்சிட்டு ஒரு 20 minutes
free vidu, fry ஆகட்டும்"னு friend சொல்ல... சரின்னு நானும்
என்னோட ரூமுக்கு போய் உங்க blog எல்லாம்
படிக்க ஆரம்பிச்சிட்டேன்.

time = time + 30;

"ஐயையோ, half an hour ஆச்சே"னு அவசரமா கிச்சன்
ஓடிப்போய் மூடிய தொறந்தா கத்திரிக்கா கண்ணுக்கு
தெரியல. அவளோ பொக.
"டிங் டிங் டிகானா, டங் டங் டகானா"னு பூதம் வராதது
தான் பாக்கி !!

30 mts HIGHல வச்சிருந்துர்க்கேன். ஆஹானு kitchen fan
போட்டு ஜன்னல் கதவ தொறந்து விட்டு வந்து பாத்தா
எல்லா கத்திரிக்காயும் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச
கலரு"னு dance !! அடடா பொழப்பு நாறிப்போச்சேனு
நினச்சிக்கிட்டே இருக்கும்போதே "கீங் கீங் கீங் கீங்"னு
smoke alarm வேற. அப்பறம் அது கிட்ட போயி, அத தாஜா
பண்ணி, துனிய வச்சி மூடி சத்தத்த stop பண்ணி...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பப்பா

இதே மாதிரி நீங்களும் செஞ்சிங்கன்னா
"Deep Fried Oil Brinjal" ரெடி :)
தயிர் சாதத்தோட மிக்ஸ் பண்ணி சாப்பிட்டா
சூப்பரா (???) இருக்கும் :)

"கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து"னு
அந்த நேரத்துல ஒரே கவிஜ வெற :)

சமையல்ல இதெல்லாம் சாதாரனமப்பானு விட்டுட்டேன் !!!
இப்போதைக்கு என்னோட சமையல் development phase.
இன்னும் 'Go-Live"க்கு டைம் இருக்கு. தவிர எனக்கு
பிடிச்ச one n only ரசம்/அப்பளம்/aalu fry etcலாம் நல்லா
செய்ய கத்துக்கிட்டேன். சோ, நோ ப்ராஃப்ஸ் :)

இந்த சின்ன மேட்டர்ல இருந்து நாம கத்துக்க
வேண்டியது என்னன்னா

1.Confidence இருக்கனும். ஆனா over-confidence இருக்கப்படாது.
2. சமையல் பண்ணும்போது blog படிக்கக்கூடாது !!!
(இல்லேனா இப்பிடி blog எழுத வேண்டியதாயிடும்... ஹி ஹி)

சரி மக்களே, இந்த பதிவுல இந்த மொக்க போதும்.
நான் NEXT மீட் பண்ற வரைக்கும் எல்லாரும்
நல்லாயிருங்க :)

வர்ட்டா..

Monday, January 15, 2007

பொங்கல் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

எங்கள் ஆளுங்கட்சியினரின் பிறந்த நாள்
(ie,திருவள்ளுவர் தினம்) வாழ்த்துக்களையும்
இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன் :)


எல்லாரும் சூப்பரா சக்கரைப் பொங்கல் சாப்டிட்டே,
சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் (அந்நியன்,அசின்
பேட்டி,பட்டிமன்றம் அது இதுன்னு) பாத்து என் சார்பாவும்
நல்ல என்சாய்ய்ய் பண்ணுங்க... இங்க அதெல்லாம்
பாக்க முடியாது :(

friend ஒருத்தன்கூட கேட்டான் "மச்சி,
உங்க ஏரியாவுல சன் டி.வி வராதா?"னு.

"டேய், எங்க ஏரியாவுல இப்பெல்லாம் சன்னே வர்றதில்லடா,
அப்பறம் எங்க சன் டி.வி"னு சொல்ல வேண்டியதா போச்சு.


எல்லா புது படங்களையும் பாத்துட்டு ரிவ்யூ எழுதுங்கப்பா.
திரு. ஆரம்பம் மாதிரி இருந்தா ஒரு சுனாமி வார்னிங்
பதிவுல குடுத்துடுங்க !!!

பி.கு:லேட்டுதான், இருந்தாலும் பொங்கல் வாழ்த்துக்கு ஒரு பதிவு போடாம இருக்க முடியல :)

Monday, January 08, 2007

திருவிளையாடல் ஆரம்பம் - 1

என்ன மக்களே, 2007 எப்பிடி போயிட்ருக்கு?
அப்போ வருது,இப்போ வருதுன்னு புத்தாண்டு லீவு
வந்துட்டு போயே போச்சு... மறுபடியும் அதே ஆணி
புடுங்கற வேலை. வழக்கம்போல
shortஆ முடிஞ்சது long weekend !!!

புத்தாண்டு பொறக்கும் போது நியூ-யார்க் டைம்ஸ்
சதுரத்துல இருக்கனும்னு நான் ப்ளான் போட்டது
"சொதப்பல்ஸ் ஆஃப் ஈஸ்ட் கோஸ்ட்" ஆனதுனால
லீவுக்கு என்னோட X-ஊரான சின்சினாட்டி
போலாம்னும் போற வழியில நம்ம
தலைவர கொலம்பஸ்-ல பிக்கப் பண்ணிட்டு மணிக்கு
ஒரு இன்ப அதிர்ச்சி தரலாம்னும் ப்லான்.

ஆனா திடீர்னு தலைவர் செல்பேசில கூப்டு
"அருண், எனக்கு கவலை தோய்ந்த உங்கள் முகங்கள்
சின்சினாட்டி அழைத்தாலும் கட்ட்ட்ட்ட்ட்சி அலுவல்கள்
(read:meeting bush) வாஷிங்டன் வரை அழைப்பதால் நான்
ஆகாய மார்க்கமாக செல்லயிருக்கிறேன். பொதுமக்கள்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை
கூறிவிடு. வாழ்க தமிழ்"னு சொல்லி எனக்கு துன்ப
அதிர்ச்சிய குடுத்துட்டாரு...
தலிவரே,அடுத்த தபா, நோ எஸ்கேப். சொல்லிட்டேன் !!!

"ஊத்திக்கிற ப்லான் தான், நல்ல ப்லானுக்கு முதல் படி" னு
மனசத் தேத்திக்கிட்டேன் !!! ஒரே மழையா இருக்குனு
"வெயில்" படம் பாக்கலாம்னு பாத்தா அதுவும் download
ஆகல.. நம்ம தமிழ் பற்று சும்மா இருக்குமா? வேற
வழியில்லாம, நோட் திஸ் பாய்ண்ட், வேற வழியில்லாம
"திருவிளையாடல் ஆரம்பம்" பாத்தேன்.
பாதி படத்துலயே அடுத்த பதிவு இதுதான்னு முடிவு
பண்ணிட்டேன். சரி, நிகழ்ச்சிக்குப் போலாமா?

அதாவது சூப்பர் ஸ்டாருக்கு பேரக் குழந்தைய குடுத்த
மகிழ்ச்சியும் வல்லவன் பள்ளத்தாக்குல போன
சந்தோஷமும் தனுஷோட ஒவ்வொரு அசைவுலயும்
தெரியுது.

தெருத் தெருவா தறுதலையா துருதுரு-னு
திரியிராரு நம்ம திரு :)
அவரோட ஒலிம்பிக்ஸ் எல்லாம் "start the music" ஆகுதாம்.
அதான் "திரு-விளையாடல் ஆரம்பம்"னு பேரு..
பெயர்க்காரணத்துக்கு ஒரு சபாஷ் :)

படத்துல ஹீரோவோட GET-UP பத்தி சொல்லியே
ஆகனும். ஒரு full hand round neck t-shirt (enga thaan kidaikumo?) ,
கட்டம் போட்ட, பட்டன் இல்லாத சட்ட, நெத்தி
மறைக்கிற முடி, கன்னம் மறைக்கிற தாடினு சும்மா படு
இயல்பா இருக்காரு. எதார்த்தத்தின் உச்சம்னே சொல்லலாம் !!

ஹீரோயின் ஷ்ரேயா, அப்பப்போ வந்தாலும் நம்ம மனச
கவர்ராங்க. ஒரு பக்கம் "சிவாஜி" படத்துல தலைவரோட
டூயட் பாடிட்டு இந்தப் பக்கம் மருமகனோட துள்ளிக்குதிச்சி
டான்ஸ் பண்றாங்க. "இன்பமும் துன்பமும் கலந்தது தான்
வாழ்க்கை"-னு நமக்கு புரியுது.

திரு அவங்க அப்பாகிட்ட business ஆரம்பிக்கறதுக்காக
ஒரு லட்சம் கேக்குறாரு (எம்.பி.யே படிச்சதெல்லாம்
காட்டலப்பா). எந்த அப்பாவும் தர மாட்டாரு. Mouli-யும்
நம்மல ஏமாத்தல. உடனே புண்பட்ட நெஞ்ச பீரூத்தி
ஆத்திக்குறாரு... மப்புல பைக்க தொலைக்க, வீட்ல
"வந்தா பைக்கோட வா"னு தொரத்த.. ஒரு கோயில்ல
போய் படுத்துக்குறாரு.

கோயில்ல காலைல கண்ண முழிச்சா ஸ்ரேயா !!!
அப்பறம் என்ன "தேவதையை கண்டேன்,காதலி
விழுந்தேன்" தான்.
screen-அ விட்டு ஸ்ரேயா விலக , திருவோட பைக் தெரிய
அங்க போற போக்குல கைல தேங்காய வச்சிட்டு ஒரு
சாமி "யாரோ நல்லவா முகத்துல முழிச்சிருக்கேள்,
அதான் தொலஞ்சு போன பைக் கிடச்சுடுத்து"னு
நெருப்புல ghee ஊத்த ஹீரோக்கு தெய்வீகக் காதலோட
அர்த்தம் புரியுது.

வல்லவன் படத்துல சொம்பு பல்லனாப் போய் propose
பண்ற மாதிரி இவரும் ஏதாச்சும் வித்யாசமா ட்ரை
பண்ணனும்னு தன்னோட காதல முதல்ல ஹீரோயின்
கிட்ட சொல்லாம நேரா அவங்க அண்ணன் , வில்லன்
ப்ரகாஷ் ராஜ் கிட்ட சொல்றாரு !!!
(அடடா , இதுவள்ளவோ புதுமை !!!)

// கிளிய வளர்த்து திரு கிட்ட
குடுக்க அவரு என்ன சூப்பர் ஸ்டாரா? இல்ல இது
என்ன நிஜ வாழ்க்கையா? கதை தானே... //

தொரத்தி தொரத்தி லவ் பண்றாரு ஸ்ரேயாவ. ஒரு
கட்டத்துல
"மொதல்ல ஒன்ன கோயில்ல பாத்தேன்,
அப்பறம் காலேஜ்ல பாத்தேன்,
அன்னைக்கு சாயந்தரமே தியேட்டர்ல பாத்தேன்.
இதுக்கெல்லாம் காதல் இல்லாம என்ன அர்த்தம்"னு
பேக்குத்தனமா ஒரு கேள்வி கேக்குறாரு.
//அந்த புள்ள போற எடத்துக்கெல்லாம் போயி சைட்
அடிச்சிட்டு எப்டி கேள்வி கேக்குது பாரு பயபுள்ள//

இது LOL :) னா, இதுக்கு ஸ்ரேயாவோட பதில் ROTFL :)

"சரி, நாளைக்கு சாயந்தரம் 5 மணிக்குள்ள நீ என்ன
மறுபடியும் பாத்துட்டேனா நமக்குள் காதல்னு நான்
ஒத்துக்கறேன்"னு சொல்லிட்டு போயிட்றாங்க...

"ஜே ஜே"னு படம் ஓடும்னு director thought pola irukku...


ஐந்து மணிக்குள்ள தனுஷ் ஸ்ரேயா சந்தித்தார்களா?
இருவரும் ஒன்று சேர்வார்களா?
கதையின் முடிவு என்ன?
ஒரே tensionஆ இருக்கா? அடுத்த பாகத்த இங்க பாருங்க :)



Disclaimer: Edho padatha paathuttu nakkal adichirukken.
Yaarum seriousaa eduthukka vendaam !!! Nija vaazkayoda
compare panniyum paaka vendaam :)

திருவிளையாடல் ஆரம்பம் - 2

வாங்க வாங்க... முதல் பாகத்த பாத்துட்டீங்க தான?
இல்லேனா கதை புரியாம போயிடப்போகுது...
ஹி ஹி :)

ஆஹா, தெரியாத்தனமா அப்பிடி ஒரு டயலாக்
விட்டுட்டோமே, இவன் வேற நம்மள மோப்பம்
பிடிப்பானே.. எங்க போய் ஒளியிறது-னு ஹோட்டல்ல
ரூம் போட்டு யோசிச்சி ஸ்ரேயா ஒரு
முடிவுக்கு வராங்க. தனுஷால கண்டே பிடிக்க முடியாத
அவரோட வீட்டுக்கு வந்து உக்காந்துக்குறாங்க..
(நாங்க என்ன யோசிச்சாலும் அடுத்த பதிவுக்கு ஒரு
ஐடியா கிடைக்க மாட்டிங்குது,உங்களுக்கு மட்டும்
எப்டிமா எப்டி... )

திரு தெருத்தெருவா ஸ்ரேயாவ கூகில் பண்றாரு...
ஆப்படல.. பைக்க வேகமா ஓட்ட... அந்த பக்கத்துல
இருந்து காரோ லாரியோ வந்தா இடிச்சே ஆகனுங்கற
தமிழ் சினிமா sentiment வேற...
ஒரு கார்ல அடிபட, GHல படுக்க, GHல இருந்து திரு
வீட்டுக்கு தொலைபேச, அத ஸ்ரேயா எடுக்க...
செய்தியக்கேட்டு பதறிப்போய் ஓட அப்பப்பா..
GHல ஸ்ரேயாவ பாத்த ஒடனே "டொய்ன்"-னு கண்ண
தொறக்குறாரு திரு. 2 பேரும் கடிகாரத்த பாக்க...
ஸ்ரேயாக்கும் நமக்கும் கெட்ட நேரம், திருக்கு
நல்ல நேரம்... மணி 5 :(

அப்பறம் என்ன "ஒத்துக்குறேன். நம்ம 2 பேருக்கும்
லவ்-னு ஒத்துக்குறேன், நெக்ஸ்ட் டூயட்-ல மீட்
பண்றேன்"னு சொல்லி டூயட் வந்துடுது.
இந்த கொடுமைய இதுக்கு மேலயும் பாக்கனுமா-னு
யோசிச்சேன். சரி, பதிவு போடனும்னு முடிவாயிடுச்சு..
பாப்போம்னு சொல்லி பாத்தேன். actually second half better.

long story short... வில்லன் அண்ணன் ப்ரகாஷ் ராஜ்
திருவ மெரட்டி பாக்குறாரு.. கடசியா டீல் இதுதான்.
"25 லட்சம் தந்தீங்கனா காதல தியாகம் பண்றேன்"னு
சொல்லி பணம் வாங்கி அத முதலீடா வச்சி பெரிய
business man ஆயிட்றாரு நம்ம திரு (rber... MBA in previous
post?)
"வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்"
"வெற்றிக் கொடி கட்டு" பாட்டெல்லாம் ஞாபகம் வருது.
Mr.பாரத் ஸ்டைல்ல "என்னம்மா கண்ணு"னு பாட்டு வேற.
ஒய்ட் n ஒய்ட் போட்டுட்டு golf கட்டைய தூக்கிட்டா
தலைவர் ஆயிடலாமா? என்ன கொடுமை திரு இது?

Climax:
ஸ்ரேயாக்கு அமெரிக்கா மாப்பிள்ளைய பாக்குறாரு
அண்ணன். தனுஷ் பணம் வாங்கிட்டு தன்ன ஏமாத்திட்டதா
திங்க் பண்ணி "ஓகே" சொல்றாங்க ஸ்ரேயா.

மண மேடை.

ப்ரகாஷ் ராஜ் கிட்ட வாங்கின 25 லட்சத்த ஒரு shoulder
bag-ல மாட்டிக்கிட்டு எவளோ கார் இருந்தாலும் பைக்ல
தான் climax-னு அடம்புடிச்சி அப்பறம் சண்டைல அந்த
பைக்கும் போய் திருவும் நண்பர்களும் ஓட... ஒரு தண்ணி
லாரி, 2 டாட்டா சுமோவால பிடிக்க முடியாத அளவுக்கு
வேகமா மண மேடைக்கு ஓட்றாங்க !!!

(திரு)மண மேடைக்கு வர்றாரு
(திரு)மணப் பொண்ணோட அண்ணன்கிட்ட climax
டயலாக் அடிக்கிறாரு
(திரு)மணத்த ஸ்டாப் பண்றாரு
(திரு)மணப் பையன் திருதிருன்னு முழிக்குறாரு

படத்தில் சுபம்.
என் மனதில் ஐயம்


யப்பா டைரக்டர்ஸ்,
படம் எடுங்க ஓகே. அட
இந்த மாதிரி லாஜிக்கே இல்லாம கூட படம்
எடுங்க , ஓகே.

அது என்ன, உங்க கதைக்கு ஒரு
உப்புக்கு சப்பாணியா
ஹீரோயின் கிட்ட BUN வாங்குற
வெத்து வெட்டு கேரக்டருக்கு எப்பவுமே
அமெரிக்கால இருந்து மாப்பிள்ளை?
அவன் நெத்தியில எதாவது எழுதி ஒட்டீர்க்கா?
ஏதாவது ஒரு தமிழ் படம் பாத்தே ஆகனும்
அப்பிடிங்கறதுக்காக ஏதேதோ சைட்ல தேடி , download
பண்ணி, ராத்திரி கண்ணு முழிச்சு உங்ங்ங்க படத்தையும்
பாக்குறத தவிர வேற எந்த தப்பும் பண்ணாத அவனுக்கு
நீங்க குடுக்குற தண்டனையா இது?
ஒரு loser கேரக்டர் ?

தலைவரே, இந்த கொடுமை போகனும்னா ஒரே ஒரு
வழி தான். இப்பிடி படம் எடுத்தா வரிவிலக்கு இல்லைனு
சட்டம் போடனும் :)


ஆன்... கல்யாணம் பண்ணிக்க போற கண்மனிகளே,

உங்களுக்கு ஏற்கனவே அமிஞ்சிக்கரைல ஒரு கேப்மாறியோ,
மதுரைல ஒரு மெக்கானிக்கோ
ஸ்டண்ட் பாயோ
வார்ட் பாயோ
ஒரு ரிச்சா/ஆட்டோக் காரனோ
ஒரு ரவுடியோ அட
ஒரு தாதாவோ
இப்டி யாரு இருந்தாலும் மொதோ வாட்டி அவன் கண்ணு
முழுச்சி call பண்ணும்போதே சொல்லீர வேண்டியது தான?
relianceindiacall செலவாவது அவனுக்கு மிஞ்சுமில்ல?
phoneல உங்க வாய்ஸ் கேட்டுட்டு OK சொல்றத தவிர அவன்
வேற என்ன பாவம் பண்ணான்?

தெனமும் BUN திங்குற அவனுக்கு ஒரு Big-Mac
எதுக்குங்கறேன் !!!!


என்ன மக்களே, என்ன நினைக்கிறீங்க?
உங்கள் கருத்துக்களை கமெண்ட் மழையில்
பொழியவும் :)

வர்ட்டா...

Disclaimer: Edho padatha paathuttu nakkal adichirukken.
Yaarum seriousaa eduthukka vendaam !!! Nija vaazkayoda
compare panniyum paaka vendaam :)