.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Thursday, December 28, 2006

புத்தாண்டு வாழ்த்துக்கள்

போன வாரம் ஜி-மூனு அவங்க வெள்ளி விழா பதிவ
கோலாகலமா தமிழ்ல எழுதி கொண்டாடினாங்க.
சரி, நம்ம ப்ளாகுக்கு தான் ஏழு கழுத வயசாச்சே,
நாம இதுவரைக்கும் எத்தன முத்து உதிர்ந்திருக்கோம்னு
பாத்தப்ப தான் தெரிஞ்சது இது நமக்கும் கோட்டர்
பதிவுனு. :)


2005,மார்ச் 21ந் தேதி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு
நடூல சும்மா சின்னதா ஒரு 15 மாசம் லீவு விட்டுட்டு
மறுபடியும் நம்ம கடைய அக்டோபர் 2006ல இந்த
பதிவு மூலமா தொடங்கினேன். அந்த முதல் பதிவுக்கே
50+ , போன பதிவுக்கு 100+னு கமெண்ட்ஸ் குடுத்து உங்க
எல்லாரோட பாசத்தையும் காமிச்சி இப்போ நான்
ஆகாசத்துல இருக்கேன் :)
உங்கள் ஆதரவு அடுத்த வருஷமும் தொடரும் என்ற
நம்பிக்கை எனக்கு உண்டு :)


This post couldnt have come at a better time.
Wish you ALL a very Happy and a Prosperous New Year :)


இந்த புத்தாண்டில்,


தமிழ்மணம் கமழட்டும்
நட்சத்திர பதிவுகள் ஜொலிக்கட்டும்
தேன்கூடுகள் விரியட்டும்
கவிதைகள் பூக்கட்டும்
முதல் வாசிப்பிலேயே புரியட்டும் :)
கட்டுரைகள் வளரட்டும்
சிறுகதைகள் பெருகட்டும்
வலை வட்டம் பெரிதாகட்டும்
பின்னூட்டங்கள் முந்தட்டும்
கோட்டர்கள் அரை_சதங்கள் ஆகட்டும்
அரை_சதங்கள் சதங்கள் ஆகட்டும்
ப்ளாகர் பிரச்சனைகள் தீரட்டும்


சச்சின் பட்டையை கெளப்பட்டும்
இந்தியா உலகக் கோப்பை வெல்லட்டும்
சாப்பெல் அவங்க ஊருக்கே திரும்பட்டும்


தலைவர் 'சிவாஜி'யில் தூள் கெளப்பட்டும்
2008 வரை படம் ஓடட்டும் :)
தசாவதாரம் கலக்கட்டும்
தனுஷ் திருவிளையாடல்கள் நிக்கட்டும்
எஸ்.ஜே.சூர்யா ஒரே அர்த்தத்தில் பேசட்டும்
பேரரசு அடுத்து எந்த ஊருக்கும் செல்லாமல் இருக்கட்டும்
சொம்புவின் பஞ்ச் டயலாக்குகள் பஞ்ச்சர் ஆகட்டும்
தெலுங்கு ஹீரோயின்கள் தமிழில் உலா வரட்டும்
ரவுடி, தாதா கதைகள் ஒழியட்டும்
நகைச்சுவை படங்கள் அதிகரிக்கட்டும்
நகைச்சுவைக்கு தேசிய விருது வழங்கப்படட்டும்


கோலங்கள் அபி ஒரு எபிசோடிலாவது சிரிக்கட்டும் :)
செல்வி தாமரை இனையட்டும்
மொத்தத்தில் கிகா சீரியல்கள் சுருங்கட்டும்


நாட்டில்,
திருடர்கள் திருந்தட்டும்
பஞ்சம் பட்டினி ஒழியட்டும்
விபத்துக்கள் குறையட்டும்
தொண்டனுக்காக வாழும் தலைவர்கள் முன்வரட்டும்
காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு வரட்டும்
இலங்கையின் வன்முறை ஒழியட்டும்
சிலைச் சண்டைகள் நிக்கட்டும்
முதியோர் இல்லங்கள் குறையட்டும்
அனாதைக் குழந்தைகள் தத்தெடுக்கப்படட்டும்
குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்லட்டும்
மொத்தத்தில்

"இந்தியா உண்மையிலேயே ஒளிரட்டும்"

நம்மால் ஆன உதவியை இதற்கு நாம் இந்த ஆண்டு

முதல் செய்வோம்.

வாழ்க தமிழ் !!!

Saturday, December 16, 2006

Tag

மக்களே, நானும் ஒரு blogger-னு என்ன மிதிச்சி...
து.. மதிச்சி ஒரு நாலு பேரு டேகியிருக்காங்க...

1. கோவைய ரசிச்சிட்டு இருக்குற அம்மணி ஜனனி.
2. செமஸ்டர் லீவ என்சாய்ய்ய்ய் பண்ற கார்த்திக்
3. ஒன்றல்ல.. இரண்டல்ல.. சதமடித்த வேதா
4. கண்ணாளனே புகழ் ப்ரியா

"நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்ல"-னு
வேலு நாயக்கர் சொன்னத மனசுல வச்சிக்கிட்டு
உங்க கண்ணு கட்டுனாலும் பரவாயில்லனு நானும்
டேகப்போறேன். மொதோ மூனு டேகுமே கதை எழுதுற..
சாரி சாரி கதைய வளர்க்கிற டேக். கதைக்கும் எனக்கும்
கல்பனா சாவ்லா போயிட்டு வந்த தூரம். அதனால
நாலாவது டேக இப்போ எழுதிக்கிறேன்.

இனி டேக்.. :)

பிடிச்ச வாசனைகள் மூனு

1) யூகலிப்டஸ் ஆயில்
2) பட்டாசு, பெட்ரோல் (நிறைய பேருக்கு பிடிக்காது,
ஆனா எனக்கு பிடிக்கும்... )
3) மழை கொட்டும்போது வரும் மண் வாசனை. சைட்ல
சுடச்சுட பஜ்ஜி இருந்தா டாப்பு :)

பிடிக்காத வாசனைகள் மூனு..

இந்த குப்பத்தொட்டி, கூவ நதி, 3 நாள் கழிச்சு ஓபன் பண்ண
பிரியானி பொட்டலம்.. இதெல்லாம் கணக்குல வராதுல்ல.. ?

1) பொதுவா எந்த டானிக்குமே பிடிக்காது, அதோட
வாசனைக்காக...
2) ஒரு லாரில வந்து கொசு மறுந்துனு சொல்லிட்டு
பொகைய போட்டு போயிருவாங்க.. கப்பு தாங்காது...
3) ஹாஸ்டல்ல சில பசங்க சாக்ஸ ஜீன்ஸ் பேண்ட்
ரேஞ்க்கு யூஸ் பண்ணுவானுங்க.. அவுங்க சாக்ஸ
கலட்டினா ரூமுக்குள்ள செம கப்பு...

அது சரி.. பிடிக்கலனு ஆயிப்போச்சு.. அப்பறம் எப்பிடி
வாசனையாகும்.. கப்பு தான?

பார்த்த வேலைகள் மூனு...

1) school days-ல news வாசிச்சிருக்கேன்... இங்க கூட ஏதோ
பி.பி.சி யாமே.. news வாசிக்க வான்னு ஒரே நச்சு.. நான்
தான் "நோ நோ.. நோ பப்ளிசிட்டினு சொல்லி வச்சிருக்கேன்" :)
2) college campus interview நேரத்துல நிறைய பேருக்கு என்னோட
ஸ்கூட்டர்ல ட்ரைவர் வேல பாத்துருக்கேன் :)
3) ஆர்க்குட்ல சச்சின் கம்யூனிட்டிக்கு ஓனர் வேல
பாத்துருக்கேன்.

மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூனு...

ஹ்ம்ம்... இது நம்ம டாப்பிக்...

1) கன்னத்தில் முத்தமிட்டால் (பொதுவா எல்லா
"மணி" "ரத்னம்" படங்களுமே...)
2) தில்லுமுல்லு (அந்த interview scene தலைவர் கலக்கல்)
3) மைக்கேல் மதன காமராஜன் (climax ROTFL-O-ROTFL..
எவளோ தடவ வேனா பாக்கலாம்)

மறக்க முடியாத நினைவுகள் மூனு...

1) கோயமுத்தூர் பாசக்கார பயலுக எல்லாம் சேந்து
விட்டுக்குடுத்ததுல 12த்ல இஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டேன்.
எங்க அம்மா,எங்க அப்பா,எங்க பிரின்சிபல்,நான்
(அதாவது மாதா,பிதா,குரு,... சரி சரி.. free விடுங்க :))
எல்லாருல் சேந்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டோம்.
அந்த நேரங்கள மறக்க முடியாது... வாழ்க்கைல
உருப்புடியா பண்ணது அது மட்டும்தான்.. அதையும்
மறந்துட்டா?

2) காலேஜ் final year-ல ஒரு 7 நாள் ட்ரிப் போனது மறக்கவே
முடியாது. (எங்க போனோம்னு எல்லாம் கேக்கப்படாது..
எடத்தப் பாக்கவா போனோம்;) )

3) கனவு நினைவான நயகரா நினைவுகள்..

பார்க்க விரும்பும் வேலை மூனு...

1) இருக்குற வேலைய மொதல்ல ஒழுங்கா பாக்கனும் :)
2) எங்க அம்மா அப்பாவ இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து
ஊர் சுத்திக் காமிக்குற Guide வேல பாக்கனும். எப்பொ மனசு
வப்பாங்களோ?
3) ரிட்டயர்ட் ஆனதுக்கு அப்பறம் டீச்சர் வேல பாக்கலாம்னு
ஒரு அபிப்பிராயம் :) { நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது..
இருந்தாலும் என்னோட ஆசைய நான் சொல்லனும்ல...}

செய்ய விரும்பும் செயல்கள் மூனு...

1) முந்தின டாப்பிக்குக்கும் இதுக்கும் என்ன வித்யாசம்னு
கண்டு பிடிக்கனும் :)
2) ஒரு மலைப்பாதைல நான் மட்டும் என்னோட கார்ல...
அங்கங்க நிறுத்தி இயற்கைய ரசிச்சிக்கிட்டே..
"மூங்கில் காடுகளே" பாட்ல வர்ர விக்ரம் மாதிரி :)
3) para gliding, sky diving, skying... etc etc

சாப்பிட விரும்பும் உணவு மூனு...

இது ஒரு நல்ல கேள்வி :)

1) அம்மா பண்ணின எது வேனா..
(veyyil standing , nizhal arumai purinjifying :))
2) Royappas,Ponnusamy,Angannan,Muniandi Vilas etc etc-ல இருந்து
எல்லா சிக்கன் டிஷ்ஷுமே சாப்பிட விரும்புறேன். ஆனா
இப்போதைக்கு இதெல்லாம் நான் செஞ்சாத்தான் :)
3) ஜில் ஜில் ஜிகர்தண்டா... மதுரைல பொறந்துட்டு இது
பிடிக்காம இருக்குமா... ஐயோ எச்சி ஊறுது..

இப்போ இருக்க விரும்பும் இடங்கள் மூனு...

1) புத்தாண்டு பொறக்கும்போது NewYork Times Square-ல
இருக்கனும்னு நினைக்கிறேன். பாப்போம். போனா ஒரு
பதிவு உண்டு :)
2) SNOWவ பாத்தாச்சி,... ஏன், போட்டோ கூட எடுத்தாச்சி...
சோ டெக்சாஸ் மாதிரி வெயில் அடிக்குற ஊர்ல இருக்கனும்
3) மேல சொன்ன ரெண்டுத்தயும் விட பெஸ்ட்டா மதுரைல
எங்க வீட்ல இருக்க விருப்பம்...

என்னை அழ வைக்கும் விஷயங்கள் மூனு...

இன்னும் கல்யாணம் கூட ஆகல...அதனால இந்த கேள்விக்கு
"பாஸ்" சொல்லிக்குறேன் :)

இந்த வம்புல நான் மாட்டி விட விரும்பும் நபர்கள் மூனு...

யாரையும் மாட்டி விடல... யாரு வேனும்னாலும் என்னோட
பேரச் சொல்லி டேகிக்கலாம் :)

veda,karthik,janani... நேத்திக்கு ஒரு பேச்சு, இன்னைக்கு ஒரு
பேச்சுனு நான் இருக்க மாட்டேன். நேத்திக்கு
கேட்டுக்கிட்ட மாதிரியே இன்னைக்கும் கெட்டுக்குறேன்
"உங்க மரம் வளர்க்குற டேகுக்கு டயம் குடுங்க" :)

ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா.. ஒரு வழியா இந்த வருஷம் முடியுறதுக்கு
முன்னாடி ஒரு டேக் எழுதிட்டேன் :)

Mission Accomplished :)

Friday, December 08, 2006

S....N.....O.....W

இந்த வாரத்துல இருந்து SNOW "ஸ்டார்ட் மூசிக்"
பண்ணிர்க்கு. நான் பணிமாற்றம் பண்ண நேரம்
இயற்கைக்கும் பனிமாற்றம் ஆயிடுச்சி :)

திங்கக்கிழமை காலைல "இன்னும் 5 நாள் ஆபிஸா"னு
நியாயமான சலிப்போட எழுந்து ஜன்னல் கதவ தொறந்து
பாத்தா....




மொத்த இடமும் வெள்ளை. பாக்க சூப்பரா
இருந்தது. இந்தா வரும் அந்தா வரும்னு சொல்லி
கடசில snow வந்திருந்தது... "புது வெள்ளை மழை" பாட்டு
தான் நினைவுக்கு வந்தது. என்ன செய்றது மதுபாலாவும்
இல்ல, மதுவும் இல்ல :(

ரொம்ப உற்சாகமா போட்டோ எடுத்துக்கலாம்னு கீழ
போனா தான் தெரிஞ்சது. குளிரு சும்மா பின்னிப்
பெடலெடுத்தது !!! இருந்தாலும் முன்வச்ச கால
பின்வைக்காம போட்டோ எடுத்தாச்சு. யாருப்பா இந்தா
முகமுடி கொள்ளக்காரன்னு எல்லாம் கேக்கப்படாது !!!


ஆபிஸ் வேல செய்யறதோட இப்போ க்ளீனர் வேல
வேற. நல்ல வேல, நம்பர் plate மறையல... இல்லேனா நம்ம

காரத்தான் clean பண்றோமானே தெரியாது :(...

இதுக்கே 15 நிமிஷம் ஆவுது :( Driving ஒரு மணி
நேரம். சும்மாவே நாங்க ரொம்ப punctual :(

எனக்கு மதுரை-ல இருந்து கோயமுத்தூர் போனா அங்கயே
சமயத்துல குளிரும் :) இங்க கேக்கவே வேண்டாம். ஆபிஸ்
மக்கள் வேற "Snow has juuuuuuuussssst started..."-னு சொல்லி
கடுப்பேத்துறாங்க. எங்க போயி முடியுமோ...

சரி சரிங்க... நீங்க சொல்றது கேக்குது.
அடுத்ததாவது நல்ல பதிவா போட்றேன். ஹி ஹி :)

Update:

1) கமெண்ட்ல வந்த இந்த link-அ பாருங்க :)

2) வெட்டியோட இந்த பனிப்பதிவயும் பாருங்க :)