.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, November 13, 2006

புரிந்தும் புரியாமலும்

நான் இஸ்கூல்ல படிக்கும் போது எனக்கு தமிழ் பாடம்னா
ரொம்ப பிடிக்கும். அட நம்புங்க !!! எழுதும்போது தான்
கொஞ்சம் அப்டி இப்டினு எழுத்துப்பிழை வரும். ஆனா
தமிழ் பாடம் ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் எங்க தமிழ்
வாத்தியாரு தான். நகைச்சுவையா நடத்துவாரு.

ஆனா செய்யுள் பகுதி மட்டும் இதுக்கு விதிவிலக்கு.
நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம். 12th-லனு நினைக்குறேன்.
ஒரு 40 திருக்குறள் இருக்கும். சரி,80 வரி தானனு மனப்பாடம்
பண்ணிட்டு போனா exam-ல வில்லங்கமா கேள்வி
கேப்பானுங்க...

"உயிர்" என்று முடியும் குறளை எழுதுக-னு கேட்டு உயிர
வாங்குவாங்க :(
திருவள்ளுவரக் கேட்டாக்கூட சொல்லுவாரானு டவுட்டு
தான்!!! அகர-ல ஆரம்பிச்சு ஒன்னு ஒன்னா சொல்லிப்பாத்தா
40தாவது குறள் தான் 'உயிர்'-ல முடியும். உக்காந்து
யோசிப்பாய்ங்களோ இப்பிடி கேக்குறதுக்கு ?

சரி, திருக்குறள் ஏதோ சின்னது. தப்பிச்சோம். சில 4வரி, 6வரி
செய்யுள் எல்லாம் இருக்கே... இன்னும் கஷ்டம். வரிசையா
படிச்சா பொருளே வெளங்காது :( .... வார்த்தைகள மாத்தி
மாத்தி போட்டா தான் புரியும்.வாத்தியார் சொல்லுவாரு
'இரண்டாவது வரியின் முதல் வார்த்தையை முதல் வரியின்
கடைசி வார்த்தையுடன் இனைக்க... மூன்றாவது வரியின்
இரண்டாவது வார்த்தையை இரண்டாவது வரியின்
கடைசி வார்த்தையுடன் இனைக்க-னு... கடுப்பா இருக்கும்
எனக்கு. இந்த லொல்லு தாங்காம ஒரு நாள்
"சார், எழுதும் போதே ஒழுங்கா எழுதியிருந்தாங்கன்னா
எங்களுக்கே புரிஞ்சிருக்குமே"-னு
கேட்டுட்டேன். அதுக்கு அவரு "எங்களுக்கெல்லாம் வேலை
போயிடுமே"-னு நகைச்சுவையா
சொன்னாரு.

இதுல இன்னொரு காமெடி... எங்க வகுப்புல எங்க வாத்தி
ஒரு செய்யுளுக்கு ஒரு விளக்கம் குடுத்தா.. 12th-B (12B இல்ல)-ல
இன்னொரு வாத்தி அதே செய்யுளுக்கு வேற விளக்கம்
குடுப்பாரு... எழுதினவன் என்ன நெனச்சி எழுதினானோ?

இத எல்லாம் ஏன் சொல்றேன்னா.. இத எல்லாம் தாண்டி
கம்ப்யூட்டருக்கு படிச்சு வேலைக்கு வந்தா இங்கயும் அதே
கதி தான். நம்ம மக்கள் எழுதுற code ஒரு மண்ணும் புரியல.
இங்க நிறைய பேருக்கு code எழுதுறத விட அடுத்தவன்
எழுதின code-அ பிரிச்சு மேய்றது தான் வேலையே... "எவனோ
ஒருத்தன் code எழுதிட்டு 30% hike-ல பக்கத்து கம்பெனிக்குப்
போயிட்டான். இங்க நான் கெடந்து அல்லாடுறேன்"-னு
என்னோட friends நிறைய பேரு சொல்லுவாங்க.

அது உண்மை தாங்க.. என்னோட friend ஒருத்தன் perl-ல
program எழுதினா exit-அ கோட்ட விட்ட ட்ரைவர் மாதிரி
முழிக்கனும். அவன்கிட்ட, 'மச்சி perl easy-ஆடானு கேட்டா"
"டேய், ரொம்ப ஈசி டா.. 'சி' மாதிரி தான்.. ஆனா "சி" தான்
கொஞ்சம் கஷ்டம்... perl மாதிரி"னு சொன்னான். "Developer"
குசும்புடா !!!

என்னோட கேள்வி இது தான்.

"புரியாத மாதிரி எழுதினாத்தான் கெத்தா????"

அப்டினா, கீழ ஒரு செய்யுள் எழுதியிருக்கேன்.
படிச்சி தெளிவாயிடுங்க !!!!

*********
யூ-டியூப்,கூகிலில் உள்ளது வழி பார்க்கும் உங்கள்
பி.சி'க்கு வீடியோக்களை தீநரியில் செய்ய
கீழ்சுமை வேண்டுமா?
*********

இதுக்கான அர்த்தம் அடுத்த பதிவில் !!!

cycle chain, auto எல்லாம் ரெடியாகுதுன்னு நினைக்குறேன்.

I am the ESCAAAAAAAAAAPE...

62 Comments:

At Monday, November 13, 2006 7:58:00 PM, Blogger G3 said...

First comment!!

Cycle chaina autovannu posta padichittu vandhu soldren :)

 
At Monday, November 13, 2006 8:07:00 PM, Blogger G3 said...

//எனக்கு. இந்த லொல்லு தாங்காம ஒரு நாள்
"சார், எழுதும் போதே ஒழுங்கா எழுதியிருந்தாங்கன்னா
எங்களுக்கே புரிஞ்சிருக்குமே"-னு
கேட்டுட்டேன். அதுக்கு அவரு "எங்களுக்கெல்லாம் வேலை
போயிடுமே"-னு நகைச்சுவையா
சொன்னாரு.//

Super.. Chancae illa.. :)

//இங்க நிறைய பேருக்கு code எழுதுறத விட அடுத்தவன்
எழுதின code-அ பிரிச்சு மேய்றது தான் வேலையே... //
100% correct.. Naangalum maintenance projectla code change pannum bodhu nenachippom.. adutha vaati endha companykku indha project poi evan naan panna change puriyaama manda kozhamba poraanonnu :)

//யூ-டியூப்,கூகிலில் உள்ளது வழி பார்க்கும் உங்கள்
பி.சி'க்கு வீடியோக்களை தீநரியில் செய்ய
கீழ்சுமை வேண்டுமா?
*********

இதுக்கான அர்த்தம் அடுத்த பதிவில் !!!//

Naan ingayae solvaenae.. Youtubelayum googlelayum paakara videosa namma PCkku firefoxla eppadi download pandradhunnu soldrengara.. Correcta?

 
At Monday, November 13, 2006 8:07:00 PM, Blogger G3 said...

Nee answera sonnappuram naan cycle chaina autova illa tanker lorryannu soldren :)

 
At Monday, November 13, 2006 8:38:00 PM, Blogger கடல்கணேசன் said...

//இந்த லொல்லு தாங்காம ஒரு நாள்
"சார், எழுதும் போதே ஒழுங்கா எழுதியிருந்தாங்கன்னா
எங்களுக்கே புரிஞ்சிருக்குமே"-னு
கேட்டுட்டேன். //

ROTFL...அருண்.. சூப்பர்.. எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க உங்க திறமைகளை.. வாய் விட்டு சிரித்தேன்.. பதிவு முழுதும் நகைச்சுவை புகுந்து விளையாடுது...

இன்னும் நிறைய இதுபோல.. சீக்கிரம் எழுதுங்க..

 
At Monday, November 13, 2006 9:27:00 PM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

Hi Arun, soppar.. thamizh vaathiyaar maddum ille.. alla moriyilum vathiyaarkal ithae kusumbuthaan pannuraarkal.. athilaeyum kanakku, programming ithilae pannra intha kusumbu thaanggale!! ithunaaleye romba per fail pannuraangga..

G3 sonna athe pathilaththaan naanum yosichen. ennaa thinamum vaerenna vaelai??.. you tubela video paarthuddu athai download seiyurathuthaan namakku vaelai.

 
At Monday, November 13, 2006 10:31:00 PM, Blogger Arunkumar said...

@g3
sema fast response !!!
namma peru solli Residency-la innoru treat vaangikko :)

 
At Monday, November 13, 2006 10:36:00 PM, Blogger Arunkumar said...

//
naan ingayae solvaenae.. Youtubelayum googlelayum paakara videosa namma PCkku firefoxla eppadi download pandradhunnu soldrengara.. Correcta?
//

puthisaali... aana epdi download panradunnu sollapadaadu !!!
naan adutha post-la solluven :)


//
Nee answera sonnappuram naan cycle chaina autova illa tanker lorryannu soldren :)
//
very sorry, indha theerpa solla vendiyadhu naatamai thaan.. avaru enga katchi :) hehe

 
At Monday, November 13, 2006 10:44:00 PM, Blogger Arunkumar said...

@கணேசன்,
//
வாய் விட்டு சிரித்தேன்.. பதிவு முழுதும் நகைச்சுவை புகுந்து விளையாடுது...
//
அது தான் எனக்கு வேனும் :)


//
இன்னும் நிறைய இதுபோல.. சீக்கிரம் எழுதுங்க..
//
கண்டிப்பா முயற்சி செய்வேன் :)

ஆனா ஏற்கனவே எதிர் கட்சி டேங்கர் லாரினு பேசுறாங்க :( அவங்க கிட்ட இருந்து என்ன நீங்க தான் காக்கனும் :)

-அருண்

 
At Monday, November 13, 2006 10:46:00 PM, Blogger Arunkumar said...

@my friend
thanks my dear friend for visiting and commenting on my blog :)

//
youtubela video paarthuddu athai download seiyurathuthaan namakku vaelai
//

eppidi download panradunnu solla vendaam. ennoda adutha postukku adhu thaan topic :)

 
At Monday, November 13, 2006 10:55:00 PM, Blogger Udhayakumar said...

//யூ-டியூப்,கூகிலில் உள்ளது வழி பார்க்கும் உங்கள்
பி.சி'க்கு வீடியோக்களை தீநரியில் செய்ய
கீழ்சுமை வேண்டுமா?
*********

இதுக்கான அர்த்தம் அடுத்த பதிவில் !!!//

என்ன இதெல்லாம்??? பூந்து விளையாடுறடா...

 
At Monday, November 13, 2006 10:57:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

G3, enga pOnaalum first commentunnu Neengka thaan irukeenga.. eppadi eppadi eppadinga

 
At Monday, November 13, 2006 10:58:00 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

//எங்க வகுப்புல எங்க வாத்தி
ஒரு செய்யுளுக்கு ஒரு விளக்கம் குடுத்தா.. 12th-B (12B இல்ல)-ல
இன்னொரு வாத்தி அதே செய்யுளுக்கு வேற விளக்கம்
குடுப்பாரு... எழுதினவன் என்ன நெனச்சி எழுதினானோ?
//
ithu sagajam thaan Arun.. thirukkuralukku eththanai pEr urainadai ezhuthi irukkaangka.. athu maathiri thaan ithuvum

 
At Monday, November 13, 2006 11:00:00 PM, Blogger Udhayakumar said...

//யூ-டியூப்,கூகிலில் உள்ளது வழி பார்க்கும் உங்கள்
பி.சி'க்கு வீடியோக்களை தீநரியில் செய்ய
கீழ்சுமை வேண்டுமா?//
YouTube, Google Videos, IE, FireFox and download...

இதுதானே???? நாங்கெல்லாம் டான் பிரவுனோட சிஷய கேடிகள்...

 
At Monday, November 13, 2006 11:04:00 PM, Blogger Arunkumar said...

@உதய்,

ஏற்கனவே இத டீகோட் பன்னிட்டாங்கடா :)

//
பூந்து விளையாடுறடா...
//

கடை திறந்ததே அதுக்குக்தானே :)

 
At Monday, November 13, 2006 11:06:00 PM, Blogger Sandai-Kozhi said...

//எனக்கு. இந்த லொல்லு தாங்காம ஒரு நாள்
"சார், எழுதும் போதே ஒழுங்கா எழுதியிருந்தாங்கன்னா
எங்களுக்கே புரிஞ்சிருக்குமே"-னு
கேட்டுட்டேன். அதுக்கு அவரு "எங்களுக்கெல்லாம் வேலை
போயிடுமே"-னு நகைச்சுவையா
சொன்னாரு.//
sense of humour jasthi ungalukku ,unga vathiyarukku ungala vida nagaisuvai jasthi.
//இங்க நிறைய பேருக்கு code எழுதுறத விட அடுத்தவன்
எழுதின code-அ பிரிச்சு மேய்றது தான் வேலையே... //LOL!
enjoyed your post :)--SKM

 
At Monday, November 13, 2006 11:15:00 PM, Blogger Arunkumar said...

@KM
kadalganesan bloglaye first comment potta perumai g3-ku irukku.. :)

//
thirukkuralukku eththanai pEr urainadai ezhuthi irukkaangka
//
correcta sonninga...


@uday,
//சிஷய கேடிகள்... //

LOL :)

 
At Monday, November 13, 2006 11:21:00 PM, Blogger Arunkumar said...

@SKM
//enjoyed your post :)--//
romba thanks madam :)

 
At Tuesday, November 14, 2006 12:17:00 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

//
youtubela video paarthuddu athai download seiyurathuthaan namakku vaelai
//

eppidi download panradunnu solla vendaam. ennoda adutha postukku adhu thaan topic :)


saringge Arun.. Naan sollamadden. Neengge poonthu vilaiyadungka! :-)

 
At Tuesday, November 14, 2006 2:37:00 AM, Blogger வேதா said...

செம கலக்கல் பதிவு அருண்:) தமிழ்ல எழுத ஆரம்பிச்சவுடன அப்படியே உங்க திறமையெல்லாம் வெளிய வருது:) எப்பவும் போல விவிசி:) நான் சொல்ல வந்த விளக்கத்தை ஜி3 சொல்லிட்டு போய்டாங்க:)

 
At Tuesday, November 14, 2006 6:58:00 AM, Blogger Bharani said...

LOL....Suuper appu...ennaku kooda indha seyyum paguthi oru puriyaadha pudhir dhaan :)

 
At Tuesday, November 14, 2006 7:00:00 AM, Blogger Bharani said...

//டேய், ரொம்ப ஈசி டா.. 'சி' மாதிரி தான்.. ஆனா "சி" தான்
கொஞ்சம் கஷ்டம்... perl மாதிரி"னு சொன்னான்//....ultimate :)

 
At Tuesday, November 14, 2006 7:01:00 AM, Blogger Bharani said...

Aaan neenga ezhdina seyyul...mandai kaanjadhula office rendu naal leave :(

 
At Tuesday, November 14, 2006 8:23:00 AM, Blogger Deekshanya said...

//"Developer"
குசும்புடா !!!// true!

//"புரியாத மாதிரி எழுதினாத்தான் கெத்தா????"// நிறைய பேர் இப்படித்தான் திரியராய்ங்க!

nice post arun.. gud job!

 
At Tuesday, November 14, 2006 8:44:00 AM, Blogger Arunkumar said...

@my friend,

//saringge Arun.. Naan sollamadden. Neengge poonthu vilaiyadungka! :-) //

neenga oru nalla friend :)
ennoda adutha posta kaapathitinga !!!


@வேதா,
//
தமிழ்ல எழுத ஆரம்பிச்சவுடன அப்படியே உங்க திறமையெல்லாம் வெளிய வருது:)
//
எல்லாம் உங்க ஆசி.

//எப்பவும் போல விவிசி:) //
அதுதான் வேனும்.

ஜி3-கு நீங்க தான் சொல்லிக் குடுத்ததா சொல்லுவீங்க போல இருக்கே!!

 
At Tuesday, November 14, 2006 8:47:00 AM, Blogger Arunkumar said...

@bharani,
3 comment pottadukku romba nandringov :)

//
mandai kaanjadhula office rendu naal leave :(
//

இத இத இந்த Effect-அ தான் என்னோட செய்யுளுக்கு எதிர்பார்த்தேன். ஏதோ என்னோட தயவுல 2 நாள் லீவ அனுபவிங்க :)

 
At Tuesday, November 14, 2006 8:49:00 AM, Blogger Arunkumar said...

@deeksh
//
நிறைய பேர் இப்படித்தான் திரியராய்ங்க!
//
கிட்டத்தட்ட எல்லாரும் :(

// nice post arun.. gud job! //
:) thx

 
At Tuesday, November 14, 2006 9:56:00 AM, Blogger Sundari said...

//அகர-ல ஆரம்பிச்சு ஒன்னு ஒன்னா சொல்லிப்பாத்தா
40தாவது குறள் தான் 'உயிர்'-ல முடியும்//

எனக்கு எப்பவுமே 'உயிர்'-ல முடியற குறளத் தவிர எல்லாமே correct a ஞாபகம் வந்து tension பண்ணும்..

//"புரியாத மாதிரி எழுதினாத்தான் கெத்தா????"//

ரொம்ப சிந்திக்க வச்சுட்டீங்க அருண்..

//"டேய், ரொம்ப ஈசி டா.. 'சி' மாதிரி தான்.. ஆனா "சி" தான்
கொஞ்சம் கஷ்டம்... perl மாதிரி"//

சூப்பர் குசும்பு..

On the Whole Enjoyed a lot !!

 
At Tuesday, November 14, 2006 10:14:00 AM, Blogger gils said...

hahahaa..chancela ponga.uzhundhu porandu karai purandu oduthu nagaichuvai unga postla..esp....//சார், எழுதும் போதே ஒழுங்கா எழுதியிருந்தாங்கன்னா
எங்களுக்கே புரிஞ்சிருக்குமே//...romba rasichathu idhaan
...
//'மச்சி perl easy-ஆடானு கேட்டா"
"டேய், ரொம்ப ஈசி டா.. 'சி' மாதிரி தான்.. ஆனா "சி" தான்
கொஞ்சம் கஷ்டம்... perl மாதிரி"னு //

idey dialgoue naanum ketruken :)

 
At Tuesday, November 14, 2006 10:20:00 AM, Blogger வேதா said...

/ஜி3-கு நீங்க தான் சொல்லிக் குடுத்ததா சொல்லுவீங்க போல இருக்கே!! /
ஹிஹி நான் சொல்ல மறந்துட்டேன், நீங்க சொல்டீங்க:)

 
At Tuesday, November 14, 2006 10:53:00 AM, Blogger Syam said...

கலக்கறீங்க போங்க...செய்யுள எடுத்து பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க...அது சரி என்னாது இது புது போஸ்ட் எப்போ போட்டீங்க...நானும் நேத்து சாயந்தரம் வரைக்கும் பார்த்தேன் ஒன்னும் காணோம் :-)

 
At Tuesday, November 14, 2006 10:54:00 AM, Blogger Syam said...

//"உயிர்" என்று முடியும் குறளை எழுதுக-னு கேட்டு உயிர
வாங்குவாங்க

எழுதினவன் என்ன நெனச்சி எழுதினானோ//

ROTFL :-)

 
At Tuesday, November 14, 2006 10:54:00 AM, Blogger Syam said...

//"உயிர்" என்று முடியும் குறளை எழுதுக-னு கேட்டு உயிர
வாங்குவாங்க

எழுதினவன் என்ன நெனச்சி எழுதினானோ//

ROTFL :-)

 
At Tuesday, November 14, 2006 11:16:00 AM, Blogger Karthik B.S. said...

present sir! :)

 
At Tuesday, November 14, 2006 1:03:00 PM, Blogger KK said...

Ullen aiya... :)
Appalika vanthu padikuren :)

 
At Tuesday, November 14, 2006 1:25:00 PM, Blogger G3 said...

@Arun : //namma peru solli Residency-la innoru treat vaangikko//
Un pera sonna treat illa beat dhaan kedaikkumaam.. Nee pesaama namma listla add pannikko.. naan mothama lastla collect pannikaren :)

//aana epdi download panradunnu sollapadaadu //
Hehe.. Nee kettalum enakku theriyaadhu. :P Adhellam teamla vera oruthar panni veippar. me only watching them :)

@KM : //G3, enga pOnaalum first commentunnu Neengka thaan irukeenga//
Seri romba feel pandreenga.. Ungalukkaga adutha 2 naal naan leave eduthukkaren.. neenga poi ella postlayum first comment pottukkonga.. :)

@Veda : //ஹிஹி நான் சொல்ல மறந்துட்டேன், நீங்க சொல்டீங்க//
Aaha.. royaltylaan kekkapudaadhu.. solliten :)

 
At Tuesday, November 14, 2006 1:29:00 PM, Blogger G3 said...

@KM : Ethana blogla 1stu comment pottalum unga blogla mattum innum adhukku chancae kedaikkala :(

 
At Tuesday, November 14, 2006 3:34:00 PM, Blogger Priya said...

enakkum seyyul manappadam panradhuna allergy dhan. Sema comedy ya solli irukkinga..

Neenga solra madhiri, ippa mathavanga code-a pakkum podhu seyyul evlavo better nu thonum.

//"சார், எழுதும் போதே ஒழுங்கா எழுதியிருந்தாங்கன்னா
எங்களுக்கே புரிஞ்சிருக்குமே"-//
ROFTL :)

//*********
யூ-டியூப்,கூகிலில் உள்ளது வழி பார்க்கும் உங்கள்
பி.சி'க்கு வீடியோக்களை தீநரியில் செய்ய
கீழ்சுமை வேண்டுமா?
*********
//
Kalakkittinga ponga. Seyyul lam school days laye niraya padichachu, Enakku idhellam puriya vendam.

 
At Tuesday, November 14, 2006 4:14:00 PM, Blogger Arunkumar said...

@sundari,
//
எனக்கு எப்பவுமே 'உயிர்'-ல முடியற குறளத் தவிர எல்லாமே correct a ஞாபகம் வந்து tension பண்ணும்..
//

எனக்கும் சில சமயம் அப்பிடித்தான். குடுக்குற 2 மார்க்குக்கு நம்ம உயிர எடுத்துருவாங்க :(

//
சூப்பர் குசும்பு.. On the Whole Enjoyed a lot !!
//
ரொம்ப நன்றி. அதுதான் வேனும் :)

 
At Tuesday, November 14, 2006 4:15:00 PM, Blogger Arunkumar said...

@gils
//
uzhundhu porandu karai purandu oduthu nagaichuvai unga postla
//
romba nandringov :)
ungalukkum andha lines thaan pidichada... sandosham :)

//
idey dialgoue naanum ketruken :)
//

kaiya kudunga. idukku kooda enakku company irukkunnu nenacha perumaya irukku...
namma katchi namma katchi thaan :)

 
At Tuesday, November 14, 2006 4:16:00 PM, Blogger Arunkumar said...

@வேதா,
//
ஜி3-கு நீங்க தான் சொல்லிக் குடுத்ததா சொல்லுவீங்க போல இருக்கே!! /
ஹிஹி நான் சொல்ல மறந்துட்டேன், நீங்க சொல்டீங்க:)
//
ஜி3யே ஒத்துக்கிட்டா !!!

 
At Tuesday, November 14, 2006 4:20:00 PM, Blogger Arunkumar said...

@syam

//
கலக்கறீங்க போங்க...செய்யுள எடுத்து பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க...
//
:)

சாயந்தரம் ஆபிஸ் முடிஞ்சி வந்து போட்டது. எத்தன நாள் தான் அந்த பல்ல கடிக்கிறவன பாக்குறது :(

 
At Tuesday, November 14, 2006 4:20:00 PM, Blogger Arunkumar said...

@karthik and kk,
porumaya vaanga... enna avasaram...


@g3
//Un pera sonna treat illa beat dhaan kedaikkumaam.. //

pona vaaram treat poi enna prachana panniyo... beataame enna pannuvaan !!!

 
At Tuesday, November 14, 2006 4:25:00 PM, Blogger Arunkumar said...

@priya

//Neenga solra madhiri, ippa mathavanga code-a pakkum podhu seyyul evlavo better nu thonum.//

seyyulukkavadu tamil vaathi irupparu, inga appidi yaarum kedayaadu :(

ungalukkum adhe lines thaan pidichirukka.. Good Good :)

//Enakku idhellam puriya vendam//

enakku mattum purinja eludinen :)
olunga eludittu approm words-a jumble panna vendiyadu thaan :)

 
At Tuesday, November 14, 2006 6:54:00 PM, Blogger மணி ப்ரகாஷ் said...

//நான் இஸ்கூல்ல படிக்கும் போது எனக்கு தமிழ் பாடம்னா
ரொம்ப பிடிக்கும். அட நம்புங்க//

நம்பிட்டோம்பா.. இதுக்கு பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரே இடத்தில இருக்கனும் கிறது

மதுர,கோயம்புத்தூர்னு திரிஞ்சா இப்படித்தான்...

ரவுசு கட்றப்பா..

nice one.

padithதேன்
sirithதேன்
maranthதேன்

 
At Tuesday, November 14, 2006 8:09:00 PM, Blogger நாமக்கல் சிபி said...

கலக்கல்...

புரியாத மாதிரி எழுதனாதாங்க எப்பவுமே கெத்து ;)

கவிதையாவட்டும், இலக்கியமாவட்டும் எவனுக்காவது புரியர மாதிரி எழுதிட்டா அதோட கெத்தே போயிடும் ;)

 
At Tuesday, November 14, 2006 10:11:00 PM, Blogger Arunkumar said...

@மணி
மதுர,கோயம்புத்தூர் ரத்தம் எல்லாம் ஓடுதுல்ல.. தமிழ் பிடிக்காம போயிடுமா?

//
padithதேன்
sirithதேன்
maranthதேன்
//
பட்வைசர் உள்ள போனாலே நீ எழுதுறது எல்லாம் கவிதையா இருக்கு :)

 
At Tuesday, November 14, 2006 10:14:00 PM, Blogger Arunkumar said...

//
கவிதையாவட்டும், இலக்கியமாவட்டும் எவனுக்காவது புரியர மாதிரி எழுதிட்டா அதோட கெத்தே போயிடும் ;)
//

இந்த வரிசைல சில பேர் Blog கூட எனக்குப் புரிய மாட்டிங்குது !!!

நல்ல கெத்தா எழுதுறாங்க :)

 
At Wednesday, November 15, 2006 1:50:00 PM, Blogger Dreamzz said...

//யூ-டியூப்,கூகிலில் உள்ளது வழி பார்க்கும் உங்கள்
பி.சி'க்கு வீடியோக்களை தீநரியில் செய்ய
கீழ்சுமை வேண்டுமா?
//

kavuthitiyae rthalai...

//"உயிர்" என்று முடியும் குறளை எழுதுக-னு கேட்டு உயிர
வாங்குவாங்க :(//

LOL

//டேய், ரொம்ப ஈசி டா.. 'சி' மாதிரி தான்.. ஆனா "சி" தான்
கொஞ்சம் கஷ்டம்... perl மாதிரி"னு சொன்னான்.//
ella developers um ore pola illainga...naanella code eludhina, adutha naal enakae puriyathu :)

 
At Wednesday, November 15, 2006 2:40:00 PM, Blogger Arunkumar said...

//
ella developers um ore pola illainga...naanella code eludhina, adutha naal enakae puriyathu :)
//
LOL :)
arasiyal vaadi aayidunga :)

 
At Thursday, November 16, 2006 2:03:00 AM, Blogger KK said...

Namakku thamizh'ku koopidra thooram athulayum seiyul Speaker potu kathuna kooda ketkaatha thooram...so ba..ba.. ba.. ba.. :)
Super comedy unga post.... Athuvum unga vaathiyar bathil and perl easy'anu kethukku bathil ROTFL!! :)
//I am the ESCAAAAAAAAAAPE...//
Actual'a unga seyul padichi naan than ESCAAAAAAAAAAPE... :)

 
At Thursday, November 16, 2006 7:17:00 PM, Blogger Arunkumar said...

adada, i am the 50th commenter:)

//
seiyul Speaker potu kathuna kooda ketkaatha thooram
//
ROTFL :)

andha seyyul eludinadukku priya enna punish pannitaanga :(

 
At Friday, November 17, 2006 12:25:00 AM, Blogger வேதா said...

50 பின்னூட்டம் வாங்கின உங்களுக்கு ட்ரீட் தர வேண்டாமா? என் வலைப்பக்கம் வந்து பாருங்க:)

 
At Friday, November 17, 2006 5:14:00 AM, Blogger Karthik B.S. said...

//உயிர்" என்று முடியும் குறளை எழுதுக-னு கேட்டு உயிர
வாங்குவாங்க :( //

sema comedy!

//சார், எழுதும் போதே ஒழுங்கா எழுதியிருந்தாங்கன்னா
எங்களுக்கே புரிஞ்சிருக்குமே"-னு
கேட்டுட்டேன்.//

hahahahahaha! :))

nalla comedya ezhudureenga! :)

 
At Friday, November 17, 2006 6:53:00 AM, Blogger sruthi said...

யூ-டியூப்,கூகிலில் உள்ளது வழி பார்க்கும் உங்கள்
பி.சி'க்கு வீடியோக்களை தீநரியில் செய்ய
கீழ்சுமை வேண்டுமா//


என்னங்க இது, best poetry writer award வாங்கிருவீங்க போல.JAVA code yeluthureengaloooo
sruthi

 
At Friday, November 17, 2006 9:43:00 PM, Blogger ஆன்லைன் ஆவிகள் said...

:))

 
At Friday, November 17, 2006 10:51:00 PM, Blogger Arunkumar said...

@வேதா,
//என் வலைப்பக்கம் வந்து பாருங்க:)//
நீங்க இவளோ பாசத்தோட கூப்பிடம்போதே டவுட்டு ஆனேன் :(

கதை எழுதுறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயங்க... கொஞ்சம் டைம் (இல்ல இல்ல நெறையவே டைம்) குடுங்க pls...

 
At Friday, November 17, 2006 10:56:00 PM, Blogger Arunkumar said...

@karthik b.s,
//nalla comedya ezhudureenga! :) //

namakku kadhai kavithai ellam ezhutha varaadu... nakkals thaan eppavum :)

@sruthi,
thx for coming and commenting friend :)

olunga eludittu jumble panna vendiyadu thaan !!!
periya vishayam kidayaadu... :)

 
At Friday, November 17, 2006 10:57:00 PM, Blogger Arunkumar said...

@annachi
smiley ellam nalla thaan irukku aana unga webpage vandha "oman 666" padam paakure effect varudhe...

 
At Wednesday, December 13, 2006 4:45:00 PM, Anonymous சுப்பு said...

//
தமிழ்ல எழுத ஆரம்பிச்சவுடன அப்படியே உங்க திறமையெல்லாம் வெளிய வருது:)
//

சத்தியமான உண்மை. என் மகன் ஒரு நாள் எண்ணிடம் கூறியது (அவன் U.S ல் 9ம் வகுப்பு முதல் படித்து வருபவன் அமெரிக்கன் அக்சண்ட் தான் வரும் )

" தமிழைப் போல நக்கல் வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லையே அது ஏன் " ?

நானும் யோசித்துப் பார்த்தில் ஆங்கிலத்தில் கூடுதல் நக்கல் வார்த்தைகள் தமிழைப் போல இல்லை என்றுதான் தோன்றுகிறது.

 
At Wednesday, December 13, 2006 6:21:00 PM, Blogger Arunkumar said...

@சுப்பு,
உங்க அனுபவத்த சொன்னதுக்கு நன்றி சுப்பு :)

 
At Wednesday, January 10, 2007 1:06:00 PM, Blogger Adiya said...

via Dreamzz

மச்சி superb poo..
//அது உண்மை தாங்க.. என்னோட friend ஒருத்தன் perl-ல
program எழுதினா exit-அ கோட்ட விட்ட ட்ரைவர் மாதிரி
முழிக்கனும். அவன்கிட்ட, 'மச்சி perl easy-ஆடானு கேட்டா"
"டேய், ரொம்ப ஈசி டா.. 'சி' மாதிரி தான்.. ஆனா "சி" தான்
கொஞ்சம் கஷ்டம்... perl மாதிரி"னு சொன்னான். "Developer"
குசும்புடா !!!
//

nice nice. solliketaa pogalam.. :) gud gud

 
At Wednesday, January 10, 2007 1:09:00 PM, Blogger Arunkumar said...

@adiya
vaanga vaanga, first time vandadhukku thanksungo...

//nice nice. solliketaa pogalam.. :) gud gud //
ellam oru experience thaan :)

matha postsayum padichittu commentanumnu kettukuren :)

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home