என்ன மக்கள்ஸ், எப்பிடி இருக்கீங்க? போன
விமன்ஸ் டேக்கு பாத்தது... நலமறிய அவா.
கொஞ்ச நாள் முன்னாடி நம்மள ஒரு மெயில்
கடிச்சித்துப்பிடிச்சு. அதுல சில...
குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கலாம்,ஆனாகுப்பற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியுமா?செல்லுல பேலண்ஸ் இல்லைனா கால் பண்ணமுடியாதுமனுஷனுக்கு கால் இல்லைனா பேலண்ஸ் பண்ணமுடியாதுஉங்க கெட்ட நேரம் பாருங்க... இந்த பதிவு எழுதுறதுக்கு
முன்னாடி அந்த மெயில படிச்சிட்டேன். அதனால நானும்
ஏதோ என்னால முடிஞ்சது...
அதாவது,
நம்ம செய்ற பணில என்னதான் மேல மேல உயர்ந்தாலும்பனிச்சறுக்கு விளையாடினா சறுக்கித்தான் ஆகனும் :)( அட அதுக்குள்ள கல்லெடுத்தா எப்பிடி... பதிவ
முடிச்சிட்றேன், கமெண்ட்ல எறிங்க :P )
"போன வாரம் பனிச்சறுக்கு விளையாடினேன்"னு பதிவ
ஸ்டார்ட் பண்ணியிருக்கலாம். ஆனா என்ன பண்றது. எது
சொன்னாலும் அதுல ஒரு பில்டப் வேண்டியிருக்கு !!!
போன சனிக்கிழமை ஒரு 7 பேரு போனோம். பாதி நாள்
சூப்பரா என்சாய் பண்ணியாச்சு. அப்ப ரனகளமான ஒடம்பு
தான் இன்னமும் installment-ல வலிக்குது.
அந்த பூட் இருக்கே.. யப்பப்பா.. அதுக்குள்ள கால விட்டு
டைட்டா க்ளாம்ப் அடிச்சிட்டு நடந்தா "ஓ மனிதா, மனிதா
ஓ மனிதா"னு வானமே எல்லை ரோபோ மாதிரி இருந்துச்சு.
அந்த பூட்லயே ஒரு சக்கரத்த ஃபிட் பண்ணி நம்ம கைல
ஒரு ரிமோட் (to ski, stop and turn) குடுத்தா நல்லா
இருந்துர்க்கும், ஆனா இன்னும் அப்பிடி எதுவும் கண்டுபிடிக்கல
போல... பூட் மாட்டின நம்ம கால ஒரு ஸ்கீயிங் பட்டைல
மாட்டிக்கனும்.அப்பறம் அது தான் நம்மள control பண்ணுது !!!
சரி, நமக்கு சொல்லிக்குடுக்க ஏதாவது ஃபிகரு வரும் , நல்ல
கத்துக்கலாம்னு பாத்தா எங்க கோச்சுக்கு தான் ஏகப்பட்ட
ஃபிகர்ஸ் !!! அடுத்தவன் சொல்லிக்குடுத்து நாம என்னைக்கு
கத்துட்ருக்கோம்.. நிக்குறது எப்பிடி, திரும்புறது எப்டினு எங்க
கோச் சொல்லிட்டு இருக்கும்போது நான் பாட்டுக்கு ஜாலியா
போட்டோக்கு போஸ் குடுத்துட்டும் அவரோட ஃபிகர்ஸ் சைட்
அடிச்சிட்டும் இருந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு "well, any
questions"னு கேட்டாரு.. இந்த கேள்விக்கு மட்டும் நாம
என்னைக்குமே பதில் சொன்னது கிடையாது. "cool. good luck"
னு சொல்லிட்டு "இவிங்கள திருத்தவே முடியாது"னு மனசுல
நினச்சிக்கிட்டே கெளம்பிட்டாரு.
அவரு சொல்லிக்குடுத்த எடம் ரொம்ப சின்ன மேடு.
"சீ சீ, இங்க சின்ன எடத்துல சறுக்குனா நமக்கு அவமானம்"னு
எல்லாரும் சேந்து முடிவு பண்ணி ஒரு சுமாரான ஹைட்
இருக்குற மலைல ஏறினோம். எஸ்கலேட்டரும் வின்ச்சும்
வச்சிருந்தாங்க மல மேல போறதுக்கு. ஏத்தி விட்ட மாதிரியே
எறக்கி விட்றதுக்கும் ஏதாவது வச்சிருந்துர்க்கலாம். ஸ்கீ
பண்ணித்தான் கீழ போக முடியும்னு சொல்லிட்டாங்க :(
என்ன கொடும சரவணன்?
"இப்ப எந்த தைரியத்துல மல மேல ஏறின நீ?" னு நம்ம
மனசாட்சி நம்மள போட்டுத்தாக்குச்சி.. "சரி ஆனது
ஆயிப்போச்சு விடு"னு கவுண்டர் ஸ்டைல்ல அதுக்கு பதில்
சொல்லிட்டு இருக்கம்போதே எவனாவது தள்ளிவிட்டானா இல்ல
நமககு balance போச்சானு தெரியல... கீழ போக ஆரம்பிச்சிட்டேன்.
அப்பறம் என்ன ப்ரேக் புடிக்காத லாரி மரத்துல மோதின மாதிரி
நானும் நடு மலைல எங்கயோ போய் மோதி கீழ விழுந்தேன்.
கைல ஸ்டைலுக்கு வச்சிருந்த குச்சி எங்க போச்சுனே தெரியல..
கால்ல மாட்டியுருந்த ஸ்கீயிங் பட்டை தான் தனியா
பக்கத்துல இருந்தது.
"சொல்லிக்குடுக்கம் போது இனிமே அடிப்பியா? சைட்
அடிப்பியா"னு எனக்கு நானே சொல்லி சிருச்சிக்கிட்டேன்.
இதுக்குப் பேரு தான் "வி.வி.சி"யா? அத இப்பிடி தான் நான்
தெரிஞ்சிக்கனுமா? ஒரே ROTSL போங்க !!!
அப்ப்றம் எப்பிடியோ பட்டைய மறுபடியும் பூட் கால்ல
மாட்டிக்கிட்டு முட்டி மோதி உருண்டு பெரண்டு வலுக்கி
சறுக்கி ஒரு வழியா கீழ வந்து சேந்தேன். நல்ல வேல எந்த
ஃபிகரும் பாக்கல... ஹி ஹி கீழ விழுந்தாலும் மீசைல
மண்ணு ஒட்டலல..
3 மணிக்கு பூட் மாட்டினது 10.30க்கு கழட்டினோம்.
டப்பா டான்ஸ் ஆடினா கூட நல்லா தான் இருந்துச்சு
இந்த ஸ்கீயிங் அணுபவம் !!!
ஹ்ம்ம், இப்பொ எறிங்கப்பூ...