.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Thursday, August 02, 2007

ஏ தந்தன தந்தன தன்னா...

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
அட அமெரிக்கா என்றாலும் அது திண்டுக்கலுக்கு ஈடாகுமா?


என்ன இந்தியா கெளம்பியாச்சா-னு கேக்குறீங்களா?
ஆமா இந்தியாவே தான்.. ஆனா நான் இல்ல :(
நமக்கு அந்த அதிர்ஷ்டம் இப்போதைக்கு இல்ல...

பின்ன யாரு?

எல்லாம் நம்ம
சின்சினாட்டி சிங்கம்
திண்டுக்கல் திரிசூலம்
நடன சூராவளி
காலெண்டர் கவிஞர் ,
தான் பட்னியில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும்
எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய
மன்மத ராசா மணி தான் :-)


ஒரு விஷயம் என்னனா...

ஒரு காலத்துல இயக்கிவிடப்பட்ட மின்விசிறி மாதிரி
சுழன்றுட்டு இருந்த இவரோட வாழ்க்க, இப்போ
சுதந்திரமா வானத்துல சிறகடிச்சி பறக்குற பறவ மாதிரி
ஆயிடுச்சு..

என்ன புரியலயா ?

சிங்கம் சிங்கிளா போகுது ஆனா வரும்போது...


ஆங்.. பாய்ண்ட புடிச்சீங்க.. அதே தான்.. அண்ணாத்தெக்கு
அடுத்த மாசம் கண்ணாலம்.. நாளைக்கு ஊருக்கு போறாரு..
(இது இறந்த காலம்...)
இந்நேரம் ஊர்ல இருப்பாரு (இது நிகழ்காலம்) :)
(லேட்டா எழுதினா இப்பிடித்தான் சமாலிக்கனும் ஹிஹி)

போனதுக்கப்பறம் நம்மள கண்டுக்க எப்பிடியும் டைம்
இருக்காது இதுல ப்ளாக் எல்லாம் கிலோ என்ன விலைனு
கேட்டாலும் கேப்பாரு.. அதுனால அவருக்கு நம்ம இப்பவே
வாழ்த்திரலாம்னு சொல்லி போன வாரம் நானும் நம்ம
கொலம்பஸ் கதாநாயகனும் சின்சி போயிருந்தோம்.

இந்த நிகழ்ச்சியத்தான் வலைப்பதிவர்கள் சந்திப்பு-னு பெரிய
பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி ஓவர் பில்டப்
குடுத்திருந்தாரு அவரு பதிவுல... வேணாம்பா ஒடம்புக்கு
ஆவாது !! இருந்தாலும் எதாவது சொல்றேன்...

வெள்ளிக்கிழம நைட் வழக்கம்போல ஒரு படம் பாத்துட்டு
(என்ன படம்.. ஹ்ம்ம், ஓசில வாழு இல்ல கஷ்டப்பட்டு சாவு...
செம காமெடி படம்.. சும்மா சொல்லக்கூடாது
ப்ரூஸ் வில்லிஸ் கேப்டனயே மிஞ்சிட்டாரு..) வீட்டுக்கு
வந்து பாசக்கார பயலுகளோட ரம்மி,போக்கர்,டம்சி-னு சில
பல விளையாட்டுகள முடிச்சிட்டு அர்த்த ராத்திரி 5 மணிக்கு
தூங்கி அதவிட அர்த்தராத்திரி 8 மணிக்கு முழுச்சி 9 மணிக்கு
"எல பசுபதி, உட்ரா போவட்டும்"னு எனக்கு நானே
சொல்லிக்கிட்டு வண்டிய மொதல்ல கொலம்பஸ்கு
விட்டாச்சு.

கொலம்பஸ் கிட்ட ஒரு கேஸ் ஸ்டேஷன்ல (அதாங்க
இந்த ஊரு பெட்ரோல் பங்க்.. ஆமா போலிஸ் ஸ்டேஷன்ல
போலிஸ பாக்கலாம். கேஸ் ஸ்டேஷன்ல gas பாக்க
முடியுமா?) அம்பி மாதிரி ஒரு சின்ன கொழந்த.. அது கிட்ட
தலைவர் போட்டோ காட்டினது தான் தாமதம்.. "i know him,
hez the one who wrote terakural... rite"னு சொல்லிட்ச்சு...
"hey no no , that is kittu maama, hez dreamworld hero.. do u know
where he lives"?னு கேட்டா "yeah, he lives right down the street,
he rides a taxi"னு சொல்லி நம்மல கொலப்பிட்சு..

நம்மாளுக்கு ப்ளாக் எழுதவே 25hrs தேவ, இதுல என்ன taxi?
அப்பறம் தான் புரிஞ்சது அந்த ஏரியாவுல தலைவர் காரு
தான் புதுசா ஆண்(ன்??)சைட் வர எல்லாருக்கும் பப்ளிக்
ட்ரான்ஸ்போர்ட்-னு :) ஸ்ஸ்ஸ் SANMUGA !!!
ஹி ஹி இந்த ஊர்ல என்னோட காரும் அப்பிடித்தான் !!
அதனால இதப்பத்தி பேச்ச கொறச்சிக்குறேன்..

சரி எங்க விட்டேன்.. ஹ்ம்ம்.. ஒரு 11.30 மணிக்கு தலைவர்
வீட்டுக்குள்ள போறேன்.. ஊதுபத்தி எல்லாம் கொளுத்தி ஒரே
பக்தி மயம். அட நம்புங்க.. அவரோட மடிக்கணினி
background கூட முருகரு தான்... அதுனால தான்
அவரு தல !!

சுடச்சுட நமக்கு தோச ஊத்தி குடுத்தாரு.. தொட்டுக்க இட்லிப்பொடி,எண்ணெய் :) ஆஹா சூப்பர் !!
(தலிவரே அடுத்த தபா நான் வேண்டான்னு சொன்னேனு
ஒன்னோட நிறுத்தப்படாது.. சரியா? ஹி ஹி)

அன்னிக்கு தான் நம்ம மை ஃபிரண்டுக்கு பர்த் டே..
என்னோட & தலைவரோட பிறந்த நாளுக்கு அவங்க
மலேசியால இருந்து call பண்ணி பாசத்த காமிச்சாங்க..
அவங்க பொறந்த நாளைக்கு நாங்க ரெண்டு பேரும்
சேந்து call பண்ணோம்... ஒரே சர்ப்ரைஸ் அவங்களுக்கு..
ஒலகம் எவளோ சின்னது , அதுல தமிழன் மனசு எவளோ
பெருசு பாத்திங்களா :)
(அட்ரா அட்ரா)

விஷ் பண்ணிட்டு வண்டிய சின்சி சிங்கம் வீட்டுக்கு
விட்டாச்சு.. என்னோட பழைய வீடுங்குறதால நமக்கு
கொஞ்சம் நாஸ்டால்ஜிக் !!! என்ன இருந்தாலும் காப்பு
கிட்ட மாட்டின ஊராச்சே :)
(இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்).

நாங்க போனப்ப தான் என்னோட இன்னொரு ஃபிரண்டு
ஒரு புது காரு வாங்கினான்.
அத கொண்டாட ஒரு மெக்ஸிகன்
ரெஸ்டாரண்டுக்கு போய் நல்ல முக்கிட்டு , புது மாப்ள
மணிக்கு எங்களால ஆன ஆறுதல சொல்லிட்டு எனக்கு
அடுத்த நாள் ஆணி புடுங்குற வேல கொஞ்சம் இருந்ததால
சாயந்தரம் கெளம்பி தலைவர ட்ராப் பண்ணிட்டு அவரு
வீட்ல ஒரு டீய குடிச்சிட்டு எங்கூருக்கு கெளம்பி
வந்துட்டேன்.. அவளோதான் மேட்டர்...

அப்ப எடுத்தது போட்டோஸ் பாக்க
http://mani-vilas.blogspot.com/2007/07/blog-post_23.html

UPDATE:
(இபப்தான் பதிவே போட்றேன், அதுக்குள்ள அப்டேட்டா?
என்ன கொடும சார் இது?)

மணி சின்சிய விட்டு கெளம்பறதுல ஒரே கண்ணீர்..
ஒரு வருஷத்துக்கும் மேல இருந்த ஊராச்சே !!!
அந்த பீலிங்க்ஸ புரிஞ்சிக்கிட்டு நான் எழுதின பாட்டு :)

*******************
கத்தாளங்காட்டு வழி சின்சினாட்டி ரோட்டு வழி
டேக்சி கட்டி போறவனே, வாக்கப்பட போறவனே...

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

ஹைட்டு மேல ஹைட்டு வச்சி மேல பறக்குதம்மா
ஜீன்ஸு போட்ட பையன் மனம் கீழ பாக்குதம்மா

தாயி தங்கமணி மனசு மருகுதம்மா
ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா
...
...
வாசப்படி கடக்கயிலே வரலயே பேச்சு
அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

*** stanza 2.. dhoda***
சின்சி போய் வரவா க்ளையண்டே போய் வரவா?
டென்னிஸ் போய் வரவா ஸ்விம்மிங்கே போய் வரவா


ஜெர்சி போட்டு நான் வெளாண்ட ஃபுட்பால் ஒன்னவிட்டு
பூரிக்கட்டை சுமந்து நிற்கும் துனைவியோடு போய் வரவா?

சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா


*******************

கொலவெறி இல்லாத திருமண வாழ்த்துக்கள் நண்பா :)


-அருண்