.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Wednesday, June 27, 2007

மீண்டும் ஒரு காதல்(இல்லா) கதை!

வணக்கம் மக்களே. எப்பிடி இருக்கீங்க? ஒரு 2 மாசமா
நான் பாட்டுக்கு ப்ளாக் யூனியன்ல கும்மி அடிச்சிட்டு
உங்க ப்ளாக எல்லாம் சைலண்டா படிச்சிட்டு வாரா
வாரம் ஊர் சுத்திட்டு சம்மர என்சாய் பண்ணிட்டு
இருந்தேன். பாசக்கார பயலுக சும்மா விடுவீங்களா?
தெனம் ஒரு டேக் போட்டு ஒரு கொல வெறியோட
பாசத்த காமிச்சிட்டீங்க !! நன்றி ஹைய்
(இந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்புது-னு
மனசாட்சி வேர அடிக்கடி கேக்குது)

சிவா , கோப்ஸ் , பரணி, கில்ஸ்-னு எல்லாரும் டேக்
பண்ணியிருக்காங்க.. அது கூட பரவாயில்ல..
"டேகுகள் பலவிதம் எல்லாமே ஒரு விதம்"-னு
சந்தோஷமா தான் இருந்தேன் (எல்லாமே 8 டேக்)
ஆனா பரணி ஆரம்பிச்ச ஒரு கதைய செம
ட்விஸ்டோட நிறுத்தி.. அத என்ன.. இந்த சின்ன
பையன தொடர சொல்லிட்டாங்க நம்ம கொடி.
என்னா ஒரு வில்லத்தனம்.
நம்மகிட்ட ஒரு கதை சிக்கனும்னு இருக்கு.
சரி எழுதுவோம்...

பார்ட் - 1 (பில்லு பரணியோட அம்பது வருஷத்து கனவு)
பார்ட் - 2 (ப்ளாக் உலக சிவசங்கரி குடுத்த ட்விஸ்ட்)
பார்ட் - 3 (கொடியின் ROTFL + மெகா ட்விஸ்ட்)

<<<<<<<<<<<<<< இதுவரை >>>>>>>>>>>>>>>>>>

"ஆமாண்டா நம்ம பெரியவன் கணேஷை பத்தி கேள்வி
பட்டாங்களாம்.. ஜாதகம் தர்றீங்களானு கேட்டாங்க.
சரினு சொல்லிருக்கேன்.
அந்த பொண்ணு கூட உன் காலேஜ் தானாமே??"

"டமால்" (கார்த்திக் இதயம்)
...

<<<<<<<<<<<<<< இனி >>>>>>>>>>>>>>>>>>
அதிர்ந்து போய் குழப்பத்தில் இருந்த கார்த்திக்கை பார்த்து,

"டேய் கார்த்தி.. என்னடா அப்பிடி பாக்குற என்ன ஆச்சு ஒனக்கு?

கையில் காபி டம்ளருடன் இருந்த அம்மாவை பார்த்து
கார்த்திக் மேலும் குழப்பத்துடன்..

"அம்மா.. நீங்க... ஃபோன்ல..
அந்த ஜாதகம்..
கணேஷ்... "

"என்னடா ஒளர்ர.. என்ன ஃபோனு என்ன ஜாதகம்...
யாரு கணேஷ்? காலங்காத்தால எதாச்சும் கனவு கண்டியா?"

ஒரு நிமிட சுதாரிப்புக்கு பின்...

"அடச்சி.. அப்பொ அதெல்லாம் கனவா?"

"ஹ்ம்ம், ஒனக்கு பிடிக்குமேனு ஆசயா செஞ்ச சப்பாத்தி தக்காளி
குருமாவ சாப்பிடலல.. அதான் ஏதோ கெட்ட கனவு
வந்துர்க்கு... "

"நீ வேர மா.. "

"அப்பிடி என்னடா கனவு? நானே பயந்துட்டேன்
ஒன்ன எழுப்பினதுல... "

"அத ஏன் மா கேக்குற.. கனவுல ஒரு 'வாலி' படமே ஓடிச்சு..
நல்ல வேல 2nd half வரதுக்குள்ள நீ எழுப்பீட்ட.."

"அது சரி யாரு கணேஷ்?"

"கனவுல என்னோட அண்ணம்மா"

"அடப்பாவி.. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு-னு
பெத்து வச்சிர்க்கோம்.. சரி சரி காலேஜ்க்கு லேட் ஆவுது,
இந்த காபிய குடிச்சிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வாடா.
சப்பாத்தி சுட்டுத்தறேன்.."

சுமார் 30 நிமிடங்கள் கழித்து..

டிவியில் பாட்டு கேட்டுக்கொண்டே சாப்பிட்டான் கார்த்திக்..

"அம்மா தக்காளி குருமா சூப்பர்... ஒன் மோர் சப்பாத்தி..."

இன்னொரு சப்பாத்தியை வைத்துவிட்டு..

"கார்த்திக்.. இந்த சந்தியா சூப்பர்ல.. காலேஜ்லலான் என்ன
பேசிப்பீங்க.."

கார்த்திக் ஆச்சர்யத்துடன்...

"சந்தியா...
காலேஜ்..
அம்மா, உங்களுக்கு... எப்டி.."

"அட்டா.. அம்புட்டு நல்ல பசங்களாடா நீங்க...
சன் ம்யூசிக் சந்தியாவ பத்தி பேசாத காலேஜ் பசங்களா?"

"ஸ்ஸப்பா.. "

ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்

"ஃபோன் அடிக்குதே எடேண்டா கார்த்தி.."

"அய்யோ ஃபோனா... நாயில்ல.. நீயே வந்து எடு"

"ஹலோ..
..
ஆமாங்க, அவன் அம்மா தான் பேசுறேன்..
..
..

"அப்டியா.."
..
..
"பையன் எங்ககிட்ட சொல்லல.. அவங்க அப்பா வந்ததுக்கு
அப்பறம் பேசிட்டு சொல்றோங்க.."

.."நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."

ஃபோன் கட் பண்ணிட்டு..

"டேய், எத்தன நாளாடா இது நடக்குது.."

"அம்மா.. அது.. வந்து..."

<<<<<<<<<<<<<<<<< ஐ யம் டன் >>>>>>>>>>>>>>>>>>>>>

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. ஒரு வழியா கடமய முடிச்சிட்டேன்..
இத தொடர ப்ளாக் உலக குழந்தை, அண்ணன், தம்பி,
பேரன் முக்கியமா என்னோட தல & குரு அம்பிய
கூப்டுக்குறேன்.. லவ் ஸ்டோரி எழுத எனக்கு தெரிஞ்சு ப்ளாக் உலகத்துல இவருதான் கிங் :)

அப்பால மத்த டேக எல்லாம் எழுத ட்ரை பண்றேன்..
சிவாஜி படம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ் அடுத்த பதிவில்
படங்களுடன்..

வர்ட்டா..