.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Monday, May 07, 2007

அழகோ அழகு

ஹாய் மக்காஸ் & மக்கிஸ், எப்பிடி இருக்கீங்க?
இப்பதான் பதிவு போட்ட மாதிரி இருக்கு,
அதுக்குள்ள 20+ நாள் ஓடிப்போச்சு.
"இங்க நான் ஒரே பிசி, அதான் பதிவ முடியல"-னு
பொய் சொன்னா அப்பறம் எனக்கு போஜனம்
கெடைக்காம போயிடும். அதனால அப்பிடி சொல்ல
மாட்டேன். இங்க ஸ்பிரிங் சீசன் ஸ்டார்ட் ஆயிர்க்கு.
(எப்போ நட்/போல்ட் சீசன் வரும்னு எல்லாம்
கேக்கப்டாது) So, ஊர் சுத்த ஆரம்பிச்சாச்சு. அதான்

பதிவு போட முடியல.

சரி, நானும் உங்கள எல்லாம் கொஞ்ச நாள் freeயா
விடலாம்னு தான் நெனச்சேன். ஆனா சங்கத்துல நான்
அனுப்புன பதிவ 105ல 14ல 6ல 1ஆ போட்டு நம்மல
இன்ப வெள்ளத்துல மூழ்கடிச்சுட்டாங்க :)
அதான் திரும்ப வந்துட்டேன். சங்கத்து சிங்கங்களுக்கு
மறுக்கா ஒரு தடவ நன்றி சொல்லிக்குறேன்.

"ஒனக்கு அழகா எதுவும் எழுத வராது, அட்லீஸ்ட்
அழகு டேகாவது எழுது"னு நம்மல டிடி அக்கா
கொஞ்ச(???) நாள் முன்னாடி டேக் பண்ணியிருந்தாங்க.
deadline இருந்தாலே நாம எல்லாம் லாஸ்ட் மினிட். இதுல
deadline வேர குடுக்கல. அதனால வழக்கம்போல இந்த
டேக்ல இருந்தும் "எஸ்" ஆயிடலாம்னு (நாட்ஸ் மாதிரி)
தான் பாத்தேன். ஆனா அக்கா சேட்ல வந்து டேங்கர்
அனுப்பிடுவேன்னு பயமுறுத்தி எழுத சொல்லிட்டாங்க :(

எனக்கு தெரிஞ்சு வலையுலகமே எழுதி முடிச்சாச்சு இந்த
டேக. மக்கள் ஆனால இருந்து அக்கன்னா வரைக்கும்
எந்த அழகையும் விட்டு வைக்கல.. இந்த அழகுல நான்
என்னத்த புதுசா அழகுறது-னு தெரியல.. அதனால சிலது
ரிப்பீட் ஆகலாம். அதுக்கு நான் பொறுப்பு கெடயாது.
அழகா மன்னிச்சிடுங்க :-)

தாஜ் மஷால்
எது, பாரதிராஜா ரியா சென்ன வச்சி எடுத்த படமா?-னு
சில பேரு கேப்பாங்க..
(ஐயோ கோப்ஸ், நான் உங்கள சொல்லுவேனா?)
அவுங்களுக்காகத் தான் கீழ படம் போட்டுர்க்கேன் :)
நோட்டு அட்டைல , போட்டோல, டிவில-னு எப்போ
பாத்தாலும் எந்த ஆங்கில்ல பாத்தாலும் தாஜ்மஹால்
அழகு தான். நான் இந்தியால வடக்கு மோஸ்ட் போனது
ஹைதராபாத் வரைக்கும் தான்.
(என்ன கொடும கொடி இது?)
அதுனால இதுவரைக்கும் இத நேர்ல பாத்ததில்ல :(
ஆனா பாத்துட்டு வந்தவங்க எல்லாம் "போட்டோல
பாக்குறத விட அழகா சூப்பரா இருக்குனு தான்
சொல்லீர்க்காங்க.. ஹ்ம்ம் , நயகரா கூட பாத்துட்டேன்.
இந்த ஆக்ரா அழக எப்ப பாப்பேனோ?

ஒன்னு கவனிச்சீங்களா, ஒரு ரங்கமணி அவரோட
தங்கமணிக்காக என்ன எல்லாம் செஞ்சிருக்காரு...
என்ன ரங்கமணிஸ், உங்க தங்கமணிக்கு நீங்க
என்ன என்னலாம் செஞ்சிருக்கீங்க? பூரிக்கட்டைல அடி
வாங்குற தவிர :)

என்ன தங்கமணிஸ்,
இதெல்லாம் கேக்குறதில்லயா? ஏதோ அக்ஷய த்ரிதி அது
இதுனு வேர வந்துட்டு போயிர்க்கு... :) அது போயிடுச்சு..
நான் சும்மா ஞாபகப் படுத்துறேன் :) உங்க ரங்கமணியோட
மணி(money)ய தங்கமா மாத்துறதுனால தான் உங்களுக்கு
அந்த பேரே வந்துர்க்கு. பேர காப்பாத்திக்கோங்க :) நான்
சொல்றத சொல்லிப்புட்டேன்...
ஓகே...அழகா பத்த வச்சாச்சு :)


டால்ஃபின்ஸ்
கடல் ஜீவன்கள்ல எனக்கு அழகா தெரியுற ஒரே ஐடம்.
கடலுக்குள்ள இருந்து எட்டி குதிச்சு மறுபடியும் டைவ்
அடிக்குற அழகே அழகு தான்.டைட்டானிக் படத்துல அவளோ பெரிய கப்பலுக்கு
கீழ 2 டால்ஃபின்ஸ் குதிச்சு விளையாடுற சீன் சூப்பரா
எடுத்துருப்பாங்க.. படத்துலயே ரொம்ப அழகான சீன்
அது தான். டைட்டானிக்-னு சொன்ன
உடனே ஞாபகம் வர்து. எங்க காலேஜ் ஜூன்ஸ்
டைட்டானிக்-க ரீமேக் பண்ணி ஸ்கிட் போட்டுர்ந்தாங்க..
செம ROTFL.. அவசியம் பாருங்க..


மதுரை மீனாக்ஷிஅம்மன் கோவில்


மதுரைல பொறந்துட்டு இதப்பத்தி சொல்லாம எப்பிடி...
கோயில்ல சாமி கும்பிட்றத விட "இதெல்லாம்
எப்பிடித்தான் கட்டினாங்களோ"னு தான் யோசிச்சிட்டு
இருப்பேன். கோவில்ல எப்பவுமே ஸாட்ஸ் போட்டு
வெள்ளக்காரனுங்க கோபுரத்தையே பாத்துட்டு இருப்பாங்க..
சின்ன வயசுல நெனப்பேன் "இவிங்க ஊர்ல இல்லாதது
அப்பிடி என்ன இதுல இருக்கு"னு.. அப்பறம் தான்
புரிஞ்சது... ஆர்ட்-னா அது நம்ம ஊரு தான்னு. இங்க
மட்டும் இவளோ கலை நயத்தோட அழகா கோயில்
கட்டியிருந்தாங்கனா எப்பவோ world's eighth wonder-ஆ
ஆக்கியிருப்பாங்க !!

Fall Colors

சொந்த ஊரப்பத்தி சொல்லியாச்சு , வந்த ஊரப்பத்தி
சொல்லனும்ல.. இங்க ஒவ்வொரு சீசனும் ஒரு ஒரு
விதத்துல அழகு தான். மொதோ தடவ SNOW பாத்தப்ப
செம அழகா இருந்துச்சு. ஆனா அது ஒரு மாசத்தோட
சரி.. அப்பறம் அதோட டெய்லி மல்லாடனும்னு

நெனச்சாலே கடியா இருக்கும். ஒரு வழியா SNOW

ஓவர் இங்க :)
ஆனா Fall சூப்பரா ரசிக்கலாம். கலர்ஸ் பாக்க கண்ணுக்கு
குளிர்ச்சியா இருக்கும். (எந்த கலர்ஸ்-னு எல்லாம் context
வச்சி புரிஞ்சிக்கிரனும்..)

மயில்

"ஆத்தா , நான் பாஸ் ஆயிட்டேன்"னு மயிலு வரப்புல ஓடி
வர்ற அழகே அழகு தான்.. சி.. என்ன சொல்ல வந்து என்ன
சொல்றேன்... நான் கீழ இருக்குற நம்ம தேசியப்பறவை
மயிலத்தான் சொன்னேன். நம்புங்கோவ் :)


ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்:
தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில்
தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர்.
தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது.
அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை,
அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில்
பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில்
பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.

அப்பிடினு கண்டிப்பா நான் சொல்லல.. விக்கீபிடியா
சொல்லுது. ஆனா பேவ் எப்பிடி peacock ஆச்சுனு அது
சொல்லவே இல்ல :)


அட, இது எல்லாம் என்னங்க அழகு.. இது
எல்லாத்தையும் விட அழகு மக்காஸ் அண்ட் மக்கிஸ்
நீங்க தான். குறிப்பா என்ன டேக் பண்ண சுதாக்கா :)
அவங்க தான் வலை உலகத்துக்கே அழகு சேக்குறாங்க
அவங்க ப்ளாக் மூலமா !!!
(நீங்க சொன்ன மாதிரி பொட்டி வந்து சேரனுங்கா.. )

அப்பறம் ப்ரியாவோட இந்த டேக்ல "நயன் அழகு பத்தி
யாருமே சொல்லல, யாருக்குமே ரசனை இல்லனு" நாட்ஸ்
சோகமா சொல்லியிருந்தாரு. அப்பிடி இல்ல நாட்டாம..
தம்பி நான் இருக்கேன். எங்கள மாதிரி அழக ரசிக்குறவங்க
நெறைய பேரு இருக்காங்க-னு ப்ரூவ் பண்ணத்தான் இது :)

ஆணிக்கு ப்ளாக் அழகு
ப்ளாகுக்கு தமிழ் அழகு
தமிழ் ப்ளாகுக்கு நாட்ஸ் அழகு
நாட்ஸுக்கு நயன் அழகு
நயனுக்கு....


சரி விடுங்க நாட்ஸ்... இதுக்கெல்லாம் போய் பீல்
பண்ணிக்கிட்டு. தியாகங்கள் நிறஞ்சது தானே
பொது வாழ்க்க :) நயனுக்கு குடுத்து வச்சது
அவளோதான் :)
அப்பறம் நாட்ஸ், நம்ம தல கார்த்தி சொன்னது படி
"யாரது நீ மோகினி"-னு கூகில்ல தேடி லேட்டஸ்ட்
ஒரு பத்து ஸ்டில்ல இருந்து அதுவும் பெய்ண்ட் ஷாப்
போயி அந்த கருவாப்பய தனுஷ படத்துல இருந்து
கட் பண்ணி போட்டுர்க்கேன்.. எல்லாம் உங்க மேல
இருக்குற பாசத்துக்காக... டி.சி வந்தா உங்க தங்கமணி
கிட்ட இருந்து காப்பாத்துவீங்கள்ல? :-)

அப்பா ஒரு வழியா முடிச்சிட்டேன். அப்பீட்டு

வர்டா...

Yaaruppa adhu purali kelappuradhu ?

Naan indha kadaya moodittadha oorla paravala pesikkiraanga-nu
thagaval vandadhu. apdi ellam ungala nimmadiya vitra maaten-nu
prove panna thaan indha jalli padivu.web-ulagame ezhudi mudicha andha beauty tag draft-la irukku.
seekirama adha compile panni production-la migrate panren :)

Evening paapom...

Varata...