.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Saturday, February 24, 2007

துரத்து...

கொஞ்ச நாள் முன்னாடி டீம் மீட்டிங்க்ல டேமேஜர்,
"The release will be in April, looking forward to it?" அப்டினு
பொதுவா கேட்டாரு. நான் கூட நம்ம தலைவர்
படத்த பத்தி தான் கேக்குறாருனு நினச்சிட்டு
ஜாலியா "yes eagerly looking forward to it"னு சொன்னேன்.
"Great"nu சொல்லி நம்ம கைல ஒரு பேஜர குடுத்து
"Users might page you if they get into any issues"னு
ஒரு குண்ட தூக்கி போட்டுட்டாரு :(
அப்பறம் தான் புரிஞ்சது அது project release னு.
எப்பொ சங்க ஊதும்னே தெரியாம படா பேஜாரா
இருக்குதுபா இந்த பேஜரோட :(

சரி சரி மேட்டருக்கு வரேன்.தலைப்பப் பாத்து ஏதோ
க்ரைம் கதை எழுதியிருப்பேன்னு நெனச்சு ஆயுதத்த
தூக்கியிருந்தீங்கன்னா கீழ போட்டுட்டு தைரியமா
மேல படிங்க. (அதாவது கீழ படிங்கனு அர்த்தம் :P)

நான் இந்த ஊருக்கு வந்த புதுசுல bank account ஓபன்
பண்ண கதையத்தான் தூசி தட்டி பதிவாப்
போட்டுர்க்கேன். இங்கிலிபிஸ்ல இருக்குறது எல்லாம்
பேசினது, தமிழ்ல இருக்குறது எல்லாம் பதிவுக்காக
யோசிச்சது :)

Bankக்கு உள்ள போயி ஒரு 360 டிகிரி சுத்தி முத்தி
(ஆமா சுத்தி ஓகே,முத்தினா என்னங்க?) பாத்துட்டு
இருந்தப்ப (ஆமா நாட்டாம்,ஒன்னும் தேரல,எல்லாம்
கெலட்ஸ்...) 2 பேரு சைஸ்ல ஒருத்தர்,

"Hi, How are you doing today"?
ஏதோ இருக்கேன் டா மார்க்கு, நீ எப்படி கீர?
Good, How about you ?

Doing Good
தொப்பய பாத்தா "Doing very good" மாதிரி இருக்கு..
"Good"ங்குறானே !!!

How can i help you sir?
வெளியில ஏன் கார் நிக்குது, ஒரு 2000 லிட்டர்
பொட்ரோல் போடு... முடியாதுல்ல.. ஒரு acccount
ஓபன் பண்ணு :)
I want to open a new account.

Ooookaeiii... Can i have ur social security and an Id card?
எங்க போனாலும் இது தான் மொதோ கேள்வியா?
சரி நானும் அதே பதில் சொல்றேன்....
Actually i am new to US. So, only last week i applied for SSN.
Herez my SSN Ref Number and my passport

All raiiiiiiitttttttt.. So, where are you from ?
அடடா இவனுக்கு நம்ம "History of birth,
Geograhy of Growth" எல்லாம் சொல்லனூம் போல
இருக்கே !!!
I am from India.

Great, I see it here. Republic of India.. which part of India ?
Delllhyyy...???
ஹிஸ்டரில இருந்து இப்போ ஜாக்ரஃபியா?
I am from TamilNadu...Delhi is North. This is South of
North. Have u been to India anytime?
நம்ம வாய் சும்மாவா இருக்கு?

No, not been there..
அதானே உங்களுக்கு east newyorku west sfo... அதுக்கு
அந்தாண்டயும் ஒலகமிருக்கு சாமி !!!
but would like to visit sometime...
கண்டிப்பா.... ஆனா சதுர்த்தி டைம்ல மட்டும்
வேண்டாம். kolukkattaiய படச்சி கடல்ல
கரச்சிருவாய்ங்க :-)
sure, India is a gr8 country.

##
afer history geog classes, he finally opens my passport
##

Goodness Gracious me... Your name is so looonggggg
It will take ages for me to key in ur name
பாருடா , ஏன் பேருக்கே இப்பிடியா? கொல்ட்டு
நண்பர்களோட பேர எல்லாம் டைப்பணும்னா?
ages ஆவாது generations தான்...

Yeah (with an utter meaningless smile). Do you want me
to type?

No, thats okay... I am almost done. How do i spell ur name
Aayran?
என்னது Aayranஆ?
No, Its "arun"
Arooon?
அடங் கொக்கமக்கா...
No No, Its "Arun"
Aruuin
என்னது ruinஆ? அட ஏண்டா? எத்தன தடவ சொல்றது
மாதேஷ் மாதேஷ் மாதேஷ் !!!
No No No, Its "Arun"
Okay... Aran?
அரணா? அது ஜீவா நடிச்ச படம்யா.. அடப்பாவிகளா
4 character தானடா என்னமோ கரப்பான்பூச்சியோட
ஜுவாலஜிகல் நேம் சொல்ற மாதிரி
கஷ்டப்பட்றியேடா !!!
Yes, you got it :) (illena innum namma pera kolai pannirpaan)

{இதக்கூட ஒழுங்கா சொல்ல மாட்டிங்குறாங்க..
ஆனா நம்ம ஊர்ல call centresla இவனுங்க பேர
எல்லாம் ஒழுங்கா pronounce பண்ணனும் இவங்க
accentலயே.. என்னத்த சொல்ல...}

##
After 10 mts
##


Okaay.. Here we go. You are almost set. Some of the forms that
you need to signனு
சொல்லி ஒரு 10 பேப்பர்ஸ தொர
நீட்டி "this is for this, this lets us do this, this is for that.." அது
இதுனு சொல்ல... நானும் "போட்டாச்சு போட்டாச்சு"
ங்குற மாதிரி சைன் பண்ணிட்டு பாத்தா என்னோட
பேர்ல ஒரு டைப்போ. அடப்பாவி 10 நிமிஷம்
எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி டைப் பண்ணியேடா
இப்பிடி தப்பா அடிக்கத்தானா?

Mark, there is a typo in my lastname.
whaops... No problem. I can change it in the system.

##
He changed something in the system
##

Okay Sir, You are all set. This is your temp debit card. Now,
do you want a credit card too? We have a bunch of offers
with them..
அட, credit history இல்லாம credit card குடுக்க மாட்டாங்கனு
சொன்னானுங்க பசங்க.. இவன் நமக்கு offer பண்றானே?னு
ஒரு சந்தேக சந்தோஷத்தோட

"Yep I will be interested"

##
After 10 mts
##
Okay Sir, you are all set. You will get ur cheque book and the
actual debit card in a week and the credit card in couple of weeks.

Thats cool... Why does it take 2 weeks for credit card?

Sir,it has to go thru an approval process

ஆஹா approvalல ஆப்பு தானா?

Oh Okay.

Is there anything else that i can help you with today?

No. Thats all. Thanks.

Thank You Sir. You have a good day !!!
இங்க பார்ரா, நாங்கெல்லாம் பழச மறக்காதவிங்க.
எப்பவுமே டைகர் பிஸ்கட் தான். குட்டேவாம்ல :P
Thanks. You too.

ஒரு வாரத்துக்கு அப்பறம் நமக்கு செக்புக்கும் டெபிட்
கார்டும் அதே டைப்போவோட வந்துச்சு. கடுப்பாகி
போய் கேட்டா, தொர சிஸ்டத்துல டைப்போ கரெக்ட்
பண்றதுக்கு முன்னாடி dispatch request பண்ணிட்டாராம்.
மறுபடியும் dispatch request குடுக்குறேன். அடுத்த வாரம்
வரும்னு ஜாலியா சொன்னாரு.

சரின்னு ஒரு வாரம் வெய்ட் பண்ணேன். அடுத்த வாரம்
debit card ஒழுங்கா வந்துச்சு.ஆனா cheque bookல அதே
டைப்போ !!! இது என்னடா கொடுமைனு திருப்பி போய்
கேட்டா சிஸ்டம்ல ரெண்டு எடத்துல மாத்தனுமாம், நம்ம
மார்க்கு ஒரு எடத்துல தான் மாத்திருந்தாரு !!

சரி. வெய்ட் பண்ணு இன்னும் ஒரு வாரம். அதுக்கப்பறம்
ஒரு வழியா ரெண்டும் ஒழுங்கா வந்துச்சு. ஆனா கூடவே
ஒரு லெட்டர். "We found that you do not have enough credit history
or revolving transactions to approve your credit card."னு. இதுக்கு
எதுக்குடா 2 வீக்ஸ். ஏன்கிட்ட கேட்டா நானே
சொல்லியிருப்பேனே எனக்கு credit history இல்லேனு.

மறுபடியும் நடயக்கட்டு.. போய் கேட்டா கோக்
குடிச்சிட்டே மார்க் ரொம்ப கூலா "To offer a credit card to
a customer is what i am supposed to do"னு அசால்டா
சொல்றான். அடப்பாவிகளா ssn நம்பரே இல்லாத
ஒருத்தனுக்கு எப்பிடி credit history இருக்கும்னு எல்லாம்
யோசிக்க மாட்டீங்களாடா?

இப்பிடி மனுஷன தொரத்து தொரத்துனு தொரத்துறாங்களே,
ஏன்னு பாத்தா அவிங்க bank பேரே அதான் !!!


Namma ooru icicila ippidi kadiya kelappirundha periya ivanunga maathiri thittirpom. inga ennatha panna mudiyudhu indha maathiri padivu podratha thavira? :)

சரிங்க மக்களே இத்தோட நான் நிறுத்திக்கிறேன்.
உள்ளாட்சித்துறைல நிறைய வேல இருக்கு.

Sunday, February 11, 2007

Happy Valentine's Day

ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
என்ன மக்களே எப்பிடி இருக்கீங்க? ஒரு 3 வாரமா
என்னோட தொல்லை இல்லாம நிம்மதியா
இருந்துர்ப்பீங்கனு நினைக்கிறேன். ஆபிஸ்ல
ஓவர்டைம் போட்டு ஆணி புடுங்க விட்டுட்டாய்ங்க.
அதான் பதிவு போட முடியல,வெறும்
கமெண்ட்றதோட சரி
(எப்பா பதிவுக்கு சரக்கில்லைனா எப்பிடியெல்லாம்
சொல்லி சமாலிக்க வேண்டியுருக்கு!!!)

இப்பொதான் புத்தாண்டு பொறந்தமாதிரி இருந்துச்சு,
அதுக்குள்ள 11 நாள் ஓடிப்போச்சு பிப்ரவரில.. நம்ம
கார்த்தியோட பதிவுகள விட டைம் வேகமா போகுது.
இன்னும் 3 நாள்ல "டேய், நீ இந்த வருஷமும்
வெட்டிப்பயலாவே (நம்ம காதல் மன்னன் பாலாஜி
இல்ல இது நான் தான்...) இருக்கியேடா.. சுத்த
வேஸ்டுடா நீ" அப்பிடினு நம்ம மனசாட்சி நம்மல
பாத்து சிரிக்கிற நாள் வேற வருது :(

காலேஜ் படிக்கம்போது இந்த 14த் அன்னைக்கு dress
code எல்லாம் இருக்கும். Blue கலர் சட்ட போட்டா
"எனக்கு ஏற்கனவே செட் ஆயிடுச்சு,இன்னொன்னுக்கு
மனசுல தான் எடமிருக்கு, பர்ஸ்ல இல்ல"-னு அர்த்தம்.
பச்ச கலர் போட்டா
"எனக்கு யாருமே இல்ல, இன்னும் தேடிட்டு
தான் இருக்கேன், எதாச்சும் பாத்து போட்டுக்குடுங்க
plsss... "னும், கருப்பு போட்டா "இந்த விளையாட்டுக்கு
நான் வரல, ஆள விடுங்க"னு அர்த்தம்.
(கலர்ஸ் எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. இத follow
பண்ணி எக்குத்தப்பா எதாச்சும் ஆச்சுனா நான் பொருப்பு
கெடயாது ஆமா...) ஆனா இதெல்லாம் உண்மை
இல்லைனு நான் உங்களுக்கு சொல்ல தேவையில்ல.
காலேஜ்ல சும்மா இது ஒரு ஜாலி :)

வருஷாவருஷம் என்ன மாதிரி ஆட்கள
துன்புறுத்துறதுக்குனே விழா எடுக்குறானுங்களே,
இதெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சான்?-னு
திங்க் பண்ணி கூகுலாண்டவர் கிட்ட கேட்டா
அவரு சொல்ற கத இதுதான்.

அதாவது, ரோம் நகரத்துல கி.பி சோ n சோ காலத்துல
க்ளாடியஸ் க்ளாடியஸ்னு ஒரு மன்னர் இருந்தாராம்..
எல்லா போர்லயும் ஜெயிச்சே ஆகனும்னு அடம்பிடிக்குற
டைப். அதுல பாருங்க, கொடும என்னான்னா அவரோட
போர் எல்லாமே long term projects தான்.

onsite வந்தாலே ஹோம்சிக் ஆகுது , அவரோட படை
வீரர்கள் எல்லாம் warsite போறவங்க. ஹோம்சிக் ஆகி
போர்ல concentrate பண்ண மாட்றாங்கனு நம்ம
புலிகேசி.. சி... க்ளாடியஸ் மன்னர் ஒரு முடிவுக்கு
வறாரு. அதாவது அவரோட படைவீரர்கள்
காதல்/கல்யாணமே செஞ்சிக்கக்கூடாதுனு கப்பித்தனமா
ஒரு சட்டத்த போட்டுட்றாரு.

போர்லயும் காதல்லயும் ஜெயிக்குறதுக்கு எது
பண்ணாலும் தப்புல்லனு சொல்லுவாங்க. இவரப்
பொருத்த வரைக்கும் போர்ல ஜெய்க்கனும்னா
காதலிக்குறது தப்பு :)

சரிங்க, இந்த எடத்துல ஒரு INTERMISSION
போட்டுட்டு நான் டீ குடிச்சிட்டு வந்து
continue பண்றேன்.

Welcome back to Valentine's Day Sirappu episode...

டீ சுமார்தான். சரி, நம்ம கதைக்கு வருவோம்.
இந்த மன்னர்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பண்றதுன்னு
தெரியாம எல்லாரும் முழிச்சுட்டு இருக்கும்போது தான்
நம்ம ஹீரோ எண்ட்ரி குடுக்குறாரு. அவரோட பேரு
Father Valentine. யாரோட Father-னு எல்லாம் கேக்கப்படாது.
அவரு ப்ரீஸ்ட்.

ஷாஜகான் விசய் ஸ்டைல்ல திருட்டுத்தனமா
ராஜாக்கு தெரியாம கல்யாணத்த பண்ணி வைக்குறாரு.
மக்கள் மத்தியில இவருக்கு நல்ல பேரு. Love Failure ஆன
எதோ ஒரு எட்டப்பன் இந்த விஷயத்த மன்னர் கிட்ட
போட்டு குடுக்க Valentineஅ ஜெயில்ல போட்டுட்றாரு
க்ளாடியஸ். அங்க ஜெய்லர் பொண்ணு மேல Valentineகு
லவ் வேவ்ஸ் workout ஆகுது. ஆனா என்ன செய்ய. அவர
தூக்குல போட்டுட்றாங்க. அந்த அன்னைக்கி
"From your Valentine"
அப்படினு அவரு ஜெய்லர் பொண்ணுக்கு ஒரு லெட்டர்
எழுதினாராம். "A tradition was born".


அந்த நாள் தான் "Feb 14th"னு வேற சொல்லனுமா?

ஆனா நமக்கு இந்த நாள் ஒரு போகி மாதிரி தான்.
பழைய ஃபிகர்ஸ எல்லாம் கழிச்சிட்டு புதியன ஃபிகர்ஸ
எல்லாம் வாழ்க்கைல புதுக்குத்துக்கிறது :)

எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தான். இருந்தாலும்

பதிவுக்கு ஆச்சில்ல :)


Advance V'Day Wishes to every blog reader :)

Labels: ,